பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 22 பகவத்கீதையில் குலங்களைப்பற்றி, வர்ணங்களைப் பற்றி குறிப்புகள் உள்ளன. ஆனால் (சாதிகள்) வர்ணங்கள் பிறப்பால் ஏற்பட்டதாகக் கீதை கூறவில்லை. குணத்தாலும் செய்கையாலும் நான்கு வர்ணங்களைப் படைத்ததாகவே பகவான் கூறுகிறார். "குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களை சமைத்தேன் (கீதை 4-13) எனவும். "பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின், இயல்பில் விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்" (கீதை 18-51) என்றும் கீதை குறிப்பிடுகிறது. எந்த இடத்திலும் பிறப்பினால் குலங்கள் ஏற்பட்டதாக சுருதிகள் கூறவில்லை. கீதையும் குறிப்பிடவில்லை. இதை அறிந்த பாரதி சாதிப்பாகு பாடுகளையும்வேறுபாடுகளையும் மிகவும் கடுமையாகக் கண்டித்துப் பல இடங்களிலும் தனது கவிதைகளில்குறிப்பிடுகிறார். "நாலு குலங்கள் அமைத்தான்- அதை நாசமுறப்புரிந்தனர் மூட மனிதர் சீலம் அறிவு கருமம் - இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம் மேலவர் கீழவர் என்றே - வெறும் வேடத்திற்பிறப்பினில் விதிப்பனவாம் போலிச் சுவடியை யெல்லாம் - இன்று பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மையுண்டென்பான்" என்று பாரதி "கண்ணன் - என் தந்தை" எனும் பாடலில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். "சாத்திரங்கள் பல தேடினேன்-அங்கு சங்கையில்லாதன சங்கையாம் - பழங் கோத்திரங்கள் சொல்லும் மூடர்தம் - பொய்மைக் கூடையில் உண்மைகிடைக்குமோ" என்று கண்ணன் - எனது சற்குரு என்னும் கவிதையில் குறிப்பிடுகிறார். நமது நாட்டில் வேறு எந்த ஒரு நாட்டிலும் இல்லாத ஒரு சாதி அமைப்புமுறை ஏற்பட்டிருப்பதும் அது நமது மூல இலக்கியங்களுக்கும் சாத்திரங்களுக்கும் மாறாக பிறப்பின் அடிப்படையில் நிறுவப்பட்டு நிலை