பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 29 பாரதி தனது விடுதலைப்பாட்டில் விடுதலையின் முழுமையான பரிமாணத்தை மொத்தமான அடையாளத்தை, பரிபூரண சுதந்திரத்தின் முழுப்பொருளைக் குறித்துக் காட்டுகிறார். விடுதலை என்றால் அரசியல் விடுதலை, பொருளாதார விடுதலை, சமுதாய விடுதலை, பெண் விடுதலை, கல்லாமையிலிருந்து விடுதலை, மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலை, இவ்வாறு அனைத்துத் துறைகளிலும் விடுதலை என்னும் உயர்ந்த விரிவான கருத்தை பாரதி தெளிவுபடுத்துகிறார். பறையர், தியர், புலையர், பரவர், குறவர், மறவர், முதலிய அனைத்து மக்களுக்கும் சமுதாய இழிவுகளிலிருந்தும் தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்தும் பிற்படுத்தப்பட்ட நிலையிலிருந்தும் அறியாமையிலிருந்தும் கல்லாமையிலிருந்தும், வறுமையிலிருந்தும், பசி பட்டினி முதலிய கொடுமைகளிலிருந்தும் முழுமையான விடுதலை கிடைக்க வேண்டும் என்பது பாரதியின் கருத்தாகும். "திறமை கொண்ட திமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞான மெய்தி. வாழ்வம் இந்த நாட்டிலே" , என்பது பாரதியின் லட்சியமாகும். ஏழையென்றும் அடிமைமென்றும், சாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பவர் இந்த நாட்டில் யாரும் இல்லை என்று. "வாழி கல்வி செல்வமெய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர்யாரும் ஒரு நிகர்ச மானமாக வாழ்வமே!" என்று விடுதலை பெற்ற பாரத சமுதாயத்தின் சமநிலையைப் பற்றி தனது லட்சியக் கருத்தைக் கூறுகிறார். அத்தகைதொரு புதிய சமுதாயத்தில் "மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் வைய வாழ்வு தன்னில் எந்த வகையிலும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே" என்று ஆண் பெண் சரிசமத்துவமாக வாழ்வோம் என்று ஒரு தெளிவான கொள்கையே வகுத்துக் கூறுகிறார்.