பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 36 2. தெய்வீகப் பாத்திரங்களைப் பற்றி பாரதி தனது பல வகையான பாடல்களிலும் தெய்வீகப் பாத்திரங்களைக் குறிப்புக் காட்டி உணர்ச்சி பொங்கப் பேசுகிறார். நாட்டுப்பாடல்களிலோ, தேசத்தலைவர்களைப் பற்றிய பாடல்களிலோ மற்றும் இதர பாடல்களிலோ, நமது புராணங்கள் இதிகாசங்கள் கதைகளில் வரும் தெய்வீகப்பாத்திரங்களைக் குறிப்பிட்டு மிகுந்த ஈடுபாட்டுடன் பாரதி பாடுவதைக் காண்கிறோம். இராமன், இலக்குவன், பரதன்,.கண்ணன், விட்டுமன், தர்மன், அர்ஜுனன், பீமன், கருணன், இந்திரசித்தன் முதலிய பல பாத்திரங்களும் வடிவங்களும் பாரதியின் கண் முன்பு வந்து நிற்கின்றனர். அவர்களை பாரதி வெறும் கதாபாத்திரங்களாகக் காணவில்லை. பாரத நாட்டின் தலைசிறந்த, பெருமைக்கும் வணக்கத்திற்கும் உரிய நடமாடும் சின்னங்களாகக் காண்கிறான். இராமனுடைய முமுமையான தெய்வீக மனித வடிவம், அர்ஜூனனுடைய வீரம், வீட்டுமனுடைய அளப்பறிய தியாகம், தருமனுடைய அறம், பாரதத்தாயின் வடிவங்களாக, குணச்சிறப்புகளாகக் காண்கிறான். நமது நாட்டுப் பெரியார்களின் அறிவு, கல்வி, ஆற்றல், வீரம், அன்பு, கருணை, செல்வங்கள் முதலிய சகல சிறப்புகளையும் பாரத தேவியின் விஸ்வருபத்தில் பாரதி காண்கிறார். அதுவே அவர்காணும் பாரதப் பண்பாட்டு தளம். தேசபக்திப் பாடல்களை நூலாக வெளியிட்டு அதை ச மர்ப்பிக்கும் போது "பூரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி, ஆத்துமநிலைவிளக்கிய தொப்ப எனக்கு பாரத தேவியின் சம்பூரண ரூபத்தைக் காட்டி ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குருவின் ச ரண மலர்களில் இச்சிறு நூலை சமர்ப்பிக்கிறேன் என்று பாரதி கூறியுள்ளதை இங்கு மீண்டும் நினைவு கொள்கிறோம். "மாரத வீரர் மலிந்த நன்னாடு மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன்னாடு நாரத கானம் நலம் திகழ்நாடு நல்லனயாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்த நன்னாடு புத்தர்பிரான் அருள் பொங்கியநாடு பாரதநாடு பழம் பெரும் நாடே"