பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 43 கர்ணனுக்கு உடலோடு கவசமும் காதோடு குண்டலமும் உடன்பிறந்தவை. அவை அவனுடைய உடலில் இருக்கும் வரை அவனுடைய உயிருக்கு ஆபத்து இல்லை. அவனை யாரும் கொல்ல முடியாது. அவனுடைய கவசம் அவனது உயிருக்குப் பாதுகாப்பானதாகும். எனவே கர்ணனிடம் அவனுடைய கவச குண்டலங்கள் இருக்கும்வரை அவனைப் பார்த்தனால் கொல்லமுடியாது. எனவே கண்ணன் மற்றொரு சூது செய்கிறான். இந்திரனை அழைத்து, மாறு வேடத்தில் கர்ணனிடம் சென்று அவனுடைய கவச குண்டலங்களை யாசித்துப் பெறுமாறு கூறுகிறான். கர்ணன் கோர்க்கோலம் பூண்டு விட்டான். துரியோதனன் படைக்கு தளபதியாகிபோரை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் இந்திரன் தனது மகன் அர்ஜுனனுடைய வெற்றிக்காக மாறு வேடத்தில் கர்ணனிடம் சென்று கவச குண்டலங்களை தானமாக்க் கேட்கிறான். சூரியனுடைய அசரீறு வாக்கையும்எச்சரிக்கையுைம் பொருட்படுத்தாது, தானம் கேட்டவனுக்கு தனது கவச குண்டலங்களைக் கொடுத்துவிட்டான். சாகும்பொழுதிலும் கர்ணனுடைய கொடை உள்ளத்தைக் கண்டு இந்திரனும் ஆச்சரியமடைந்து அவனைப் பாராட்டுகிறான். இ ன்னும் கர்ண னது வ ள்ள ல் தன் ைம யி ன் சி க ரத் தை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. கர்ணனுடைய சக்தி ஆயுதங்கள் பலவும் தீர்ந்து விட்டன. இவனது உயிருக்குப் பாதுகாப்பான கவச குண்டலங்களும் இந்திரனுக்குத் தானமாககப் போய்விட்டன. கர்ணன் கற்றவித்தைகள் பலவும்.அவனது குருவான பரசுராமனின் சர்பத்தால் அவ்வப்போது நினைவுக்கு வராமல் போகிறது. அர்ஜுனனுடைய சாரதி கண்ணன் மிகவும் திறமையாக, சாதுர்யமாக, தேரையும் செலுத்திக் கொண்டு பார்த்தனுக்கு பல நல்ல ஆலோசனை களையும் கூறி வழிகாட்டுகிறான். கர்ணனுக்கு கடைசி நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. திடீரென்று போர்க்களத்தில் கர்ணனுடைய தேர்ச்சக்கர்ம் பூமியில் பதிந்து விட்டது. தேரிலிருந்து இரங்கி கர்ணன் தனது தோள்களில் தேர்ச்சக்கரத்தைத் தாங்கி தேரைத் துக்கி நிறுத்த முயற்சிக்கிறான். அந்த நேரத்தில்அவன்மீது கணைகளை ஏவுமாறு கண்ணன் பார்த்தனுக்கு வழிகாட்டுகிறான். பார்த்தன் அம்புகளை ஏவுகிறான். ஆனால் அந்த அம்புகள் எல்லாம் கர்ணனுடைய புண்ணியத்தின் முன் தலை வணங்கி மலர்களாக மாறுகின்றன. கண்ணன் தனது தேரை சற்று நிறுத்திவிட்டு, ஒரு ஏழை அந்தணன் வேடத்தில், மண்ணில் பதிந்திருந்த தேர்ச் சக்கரத்தைத் தோள் கொடுத்துத் துக்கிக் கொண்டிருந்த கர்ணனிடம் போய் யாசகம்கேட்கிறான். தான் வறுமையில் வாடுவதாகவும் தனக்கு உதவி கேட்டும் யாசித்தான்.