பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி முன்னுரை: @ 750 சுப்ரமணிய பாரதி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிப்பட்ட மாபெரும் தமிழ்ப்புலவனாகும். அவருடைய மொத்த வாழ்நாள் 1882 டிசம்பர் 11 பிறப்பு 1921 செப்டம்பர் 12 மறைவு ஆக 39 ஆண்டுகள் நிறைவு பெறவில்லை. இதில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் குறைவானதுதான் அவருடைய பொது வாழ்க்கை என்று கூறலாம். இந்த இருபதுக்கும் குறைவான ஆண்டுகளுக்குள்தான் அவருடைய கவிதைகளும் கதைகளும் கட்டுரைகளும் எழுத்துரைகளும் வெளிப்பட்டுள்ளன. 1920ம் ஆண்டுகள் 30ம் ஆண்டுகளில் தமிழகத்தில் தேசீய இயக்கங்களும் போராட்டங்களும் பரவியபோது, தேசபக்தர்களுக் கிடையிலும் தேசிய இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த மக்களுக்கிடையிலும் பாரதியாரின் பாடல்கள் பிரபலமாயின. ஆயினும் பாரதியின் முழுவடிவம் தமிழ் மக்களுக்கிடையில் வெளிப்படுவதில் பல பரச்சனைகள் இருந்திருக்கின்றன. ஆயினும் மகாகவி பாரதி இன்று தமிழ் கூறும் நல்லுகத்தில் தமிழ் மக்களின் உள்ளங்களில், வீடுகளில் இடம் பெற்றுள்ள மாபெரும் கவிஞனாகும். இருப்பினும் பாரதியை தமிழ் மக்களுக்கிடையிலும் இந்திய மக்களுக்கிடையிலும் உலக மக்களுக்கிடையிலும், இன்னும் அதிகமாக அறிமுகப்படுத்த வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. அவை தொடரவேண்டும் மேலும் தொடர வேண்டியதிருக்கிறது. பாரதியைப் பற்றி ஏராளமான பல நூல்களும் ஆய்வுரைகள் வெளியாகியுள்ளன. பாரதி விழாக்களும் ஏராளமாக நடைபெற்றுள்ளன, நடைபெற்று வருகின்றன. பாரதி பெயரில் பாரதியின் கருத்துக்களைப் பரப்பும் பல மன்றங்களும் அமைப்புகளும் இன்று நாடெங்கும் செயல்பட்டு வருகின்றன. மும்பை, டில்லி, கல்கத்தா முதலிய நாட்டின் முக்கிய நகரங்களிலும் பாரதி பெயரிலான அமைப்புகளும் மன்றங்களும் சங்கங்களும் செயல்படுகின்றன. ஆயினும், பாரதியின் பெயரும் தியாகமும் பரவியுள்ள அளவில் அவருடைய கவியுள்ளமும், கருத்துக்களின் ஆழமும் மக்களிடத்தில் பரவுவதில் இன்னும் இடைவெளி இருக்கிறது. 1982ம் ஆண்டில் பாரதியின் நூற்றாண்டு விழா நடைபெற்றபோது பாரதி சற்று அதிகமாக அறிமுகமானார். பல அறிஞர்களும், அன்பர்களும் பாரதியைப் பற்றி பல செய்திகளை வெளிப்படுத்தினார்கள். பாரதி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்தவர் என்னும் முறையில், அவருடைய சமகாலத்தவர்களும், அவரை நேரில் அறிந்தவர்களும் வெளிப்படுத்திய பல செய்திகளும், தகவல்களும் அவரைப்பற்றிய அவருடைய வாழ்க்கை விவரங்களைப் பற்றிய, அவரது