பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் "சின்னக்குழந்தைகள் போல் விளையாடிச் சிரித்துக்களித்திடுவான் - நல்ல வன்னமகளிர்வசப்படவே பல மாயங்கள் சூழ்ந்திடுவான் - அவன் சொன்னபடி நடவாவிடிலோ மிகத் தொல்லையிழைத்திடுவான் - கண்ணன் தன்னையிழந்துவிடில், ஐயகோ, பின் சகத்தினில் வாழ்வதிலேன்" என்று பாடுகிறார். "கோபத்திலே யொரு சொல்லிற் சிரித்துக் குலுங்கிடச் செய்திடுவான் - மனஸ் தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி தளிர்த்திடச் செய்திடுவான் - பெரும் ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று அதனை விலக்கிடுவான் - சுடர்த் தீபத்திலே விழும் பூச்சிகள் போல்வரும் தீமைகள் கொன்றிடுவான்"என்றும் "உண்மை தவறி நடப்பவர் தம்மை உதைத்து நசுக்கிடுவான் - அருள் வண்மையினால் அவன் மாத்திரம் பெய்கள் மலைமலையாய் உரைப்பான் - நல்ல பெண்மை குணமுடையான் - சில நேரத்தில் பித்தர் குணமுடையான்- மிகத் தண்மை குணமுடையான் - சில நேரம் தழலின் குணமுடையான்" என்றும்

"கொல்லும் கொலைக்கஞ்சிடாத மறவர் குணமிகத்தானுடையான்-கண்ணன் சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு சூதறியாது.சொல்வான் - என்றும் நல்லவருக்கொருதீங்கு நண்ணாது நலமுறக்காத்திடுவான் - கண்ணன் அல்லவருக்கு விடத்தினில் நோயில் அழலினிலும் கொடியான்" என்றும் "காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண் மகிழ்சித்திரத்தில் -பகை மோதும் படைத்தொழில் யாவினுமே திற முற்றிய பண்டிதன் காண்-உயர் வேத முனர்ந்த முனிவர் உணர்வினில் மேவுபரம் பொருள் காண்- நல்ல கீதையுரைத்தெனை இன்புறச் செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடுவேன்" என்றும் கண்னனின் கீர்த்திகள்ைப் பாடுகிறான்.