பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 55 கோடி சாத்திரங்கள், அதினுள் ஞானம், அத்துடன் நகைப் பிற்கிடமான பல பொய் வேதங்கள், மதக்கொலைகள், அரசர்களின் கூத்துகள், மூத்தவர் பொய் நடை, சில மூ டர்களின் கவலை முதலியவைகளையும் புனைந்து வைத்தாள் என்று கூறுகிறான். கண்ணன் எனது தாய் என்னும் தலைப்பில் பாரதி பாடியுள்ள இந்தக் கவிதை மிக அற்புதமானது. கடைசியில் என்னை ஆண்டருள்புரிந்திடுவாள், அண்ணன் அர்ஜுனன் போல் என்னை ஆக்கிடுவாள். புகழும் பெருமையும் அவள் கொடுப்பாள் என்று முடிப்பது மிகவும் அருமையாக அமைந்துள்ளது. தந்தை கண்ணன் என்னை பூமிக்கு அனுப்பினார். அங்கு எனது தம்பிமார்கள் இருந்தனர். எங்கள் இனத்தார் அங்கு தங்கள் மனம் போல இருந்து ஆண்டுவந்தனர். --- இப்பூமியில் செல்வங்களுக்கோர் குறைவில்லை. எல்லா செல்வங்களும் உள்ளன. அளவில்லர் பொற்குவியல்களை எனது தந்தை சேமித்து வைத்திருந்தான். அவன் கல்வியில் பெரியோன். அவனுடைய கவிதைகளில் இனிமைக்கோர் அளவில்லை. அவனிடம் பலவகை மாண்புகள் இருந்தன. எனினும் அவனிடம் அடிக்கடி பயித்தியம் தோன்றும். நல்வழியில் செல்பவர்களைப் பல சோதனைகளுக்குள்ளாக்கி மனம் நொந்து வேகும் அளவிற்குக் கொண்டு சென்றுவிடுவான். அவனுக்கு மூவகை பெயர்கள் உண்டு. இந்த உண்மை அறியாதவர்கள் அவர்களுக்குள் சண்டையடித்துக் கொள்கிறார்கள். கண்ணன் "பிறந்தது மறக்குலத்தில்- அவன் பேத மறவளர்ந்ததும் இடைக்குலத்தில் சிறந்தது பார்ப்பனருள்ளே -சில செட்டிமக்களோடு மிகப்பழக்க முண்டு. நிறத்தினில் கருமை கொண்டோன்- அவன் நேயமுறக்களிப்பது பொன்னிறப் பெண்கள் துறந்த நடைகளுடையான் - அவன் சூனியப் பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான் என்று பாரதி குறிப்பிடுகிறார்