பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 56 "ஏழைகளைத் தோழமை கொள்வான்-செல்வம் ஏறியார்தமைக் கண்டு சீறிவிழுவான் தாழவரும் துன்பமதிலும் - நெஞ்சத் தளர்ச்சி கொள்ளாதவர்க்குச் செல்வமளிப்பான்" என்றும் "இன்பத்தை இனிதெனவும் - துன்பம் இனிதில்லை யென்றுமவன் எண்ணுவதில்லை அன்புமிகவுடையான்-தெளிந் தறிவினில் உயிர்குலம் ஏற்றமுறவே அன்புகள் பலபுரிவான்" என்றும் கூறுகிறார். வே தங்களை ப் பற்றி பாரதி இக் கவிதை யி ல் தனது தனித்தன்மையான கருத்தை மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார். இதை ஏற்கனவே முதல் அத்தியாயத்தில் மேற்கொள் காட்டியிருக்கிறோம். இங்கு தொடர்ச்சிகருதி மீண்டும் அவ்வரிகளை நினைவு கொள்ளலாம். "வேதங்கள் கோத்து வைத்தான்-அந்த வேதங்கள் மனிதர் தம்மொழியில் இல்லை வேதங்கள் என்று புவியோர் - சொல்லும் வெறும் கதைத்திரளில் அவ்வேத மில்லை வேதங்கள் என்றவற்றுள்ளே - அவன் வேதத்தில் சிலசில் கலந்த துண்டு வேதங்கள் அன்றி ஒன்றில்லை - இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகளெல்லாம்" என்று குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது. வேதங்கள் என்பது மெய்யறிவாகவும் பொய்க்கதைகள் பல கலந்தும் மக்களிடம் பரவியுள்ளன. நமது வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் இதிகாசங்கள், கதைகள், இலக்கியங்கள் முதலியன பலவும் அவைகளிலுள்ள அவைகளில் கலந்துள்ள கருத்துக்களும் இடைச் செருகல்களும் மக்களிடையில் இடைவிடாது உரையாடப்பட்டு வந்திருக்கின்றன. அது வாழையடி வாழையாக பரம்பரை பரம்பரையாக பரவி வந்ததுள்ளன. "இயற்கை விதியை அனுசரித்து வாழவேண்டும்.அதனால் எவ்விதமான தீமையும் எய்தமாட்டாது, எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை ஆங்கிலேயர் காமன்சென்ஸ்(பொது அறவு) என்பர் சுத்தமான, மாசுபடாத கலங்காத, அஞ்சாத, பிழைபடாத சாதாரண அறிவே