பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 57 பரம மெய்ஞ்ஞானமாகும் என்று பாரதி தனது பகவத்கீதை நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அதுவே பொது அறிவு எனறு அனைவராலும் குறிப்பிடப்படுவதாகும். நாலு கு லங்கள் பற்றி பல இடங்களிலும் பாரதி தனதுகருத்துக்களை மிகத் தெளிவாக முன்வைத்துள்ளார்.இக்கவிதையில் முன்வைத்துள்ள வரிகளையும் ஏற்கனவே முந்திய அத்தியாயத்தில் மேற்கோளாகக் காட்டியுள்ளோம். தொடர்ச்சி கருதி மீண்டும் இங்கு குறிப்பிட்டுள்ளோம். திரும் பத்திரும்ப இக்கருத்துக் களைக் குறிப்பிட்டாலும் கூறியது கூறல் என்றும் குற்றம் ஏற்படாமல் அவ்வரிகளில் பொதிந்துள்ள கருத்துக்களை மீண்டும் மீண்டும் படித்தும் சிந்தித்தும் செயல்படுத்தத்தக்கனவாகும். "நாலுகுலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப்புரிந்தனர் மூடமனிதர் சிலம் அறிவு தர்மம் இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம் மேலவர் கீழவர் என்றே - வெறும் வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம் போலிச்சுவடியை யெல்லாம் - இன்று பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்" என்று தந்தை கண்ணன் கூறுவதாகப் பாரதி குறிப்பிடுகிறார். வயது முதிர்ந்து விடினும் எந்தைக்கும் வாலி பக்களை மாறவில்லை. அது என்றும் மாறுவதில்லை. துயரில்லை. முப்புமில்லை. என்றும் சோர்வில்லை. நோய் ஒன்றும் தொடுவதில்லை பயமில்லை. பரிவொன்றில்லை எவர்பக்கமும் நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை. நயம் மிகத்தெரிந்தவன். நடு நின்று விதிச் செயல்கண்டு மகிழ்பவன் கண்ணன் என்பது பாரதியின் வாக்கு. இவையெல்லாம் பாரதி மீண்டும் மீண்டும் கூறும் மூலமந்திரங்களாகும். "அன்பினைக்கைக் கொள் என்பான் துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடுமென்பான் என்றும், "இன்பத்தை எண்ணுபவர்க்கே - என்றும் இன்பம் மிகத்தருவதில் இன்பமுடையான்" என்று இக்கவிதை வரிகளை முடிக்கிறார் பாரதியார்.