பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 72 அத்துடன் பாஞ்சாலி சபதத்தில் தர்மனைக் கடுமையாகச் சாடியே பேசியுள்ளான். "மேலும் பாரதி அறுபத்தாறு" கவிதையில் பொறுமையினை அறக்கடவுள் புதல்வனென்னும் யுதிட்டிரனு நெடுநாளிப்புவிமேற்காத்தான் இறுதியிலே பொறுமை நெறிதவறி விட்டான் ஆதலால் போர்புரிந்தானிளையாரோடே பொறுமையின்றிப் போர் செய்து பாரத நாட்டைப் போர்க்களத்தே அழித்து விட்டுப் புவியின்மீது வறுமையையும் கலியினையும் நிறுத்திவிட்டு மலைமீது சென்றான் பின் வானம் சென்றான்" என்று பாரதி குறிப்பிடுகிறார். பாமர மக்களின் பொதுநிலை பற்றி துரியோதனன் வாயிலாக பாரதி கூறும் ஒரு பொதுச் செய்தி. "நிதி செய்தாரைப் பணிகுவர் மானிடர் மாமனே - எந்த நெறியினால் அது செய்யினும் நாயேன நீள்புவி துதி செய்தே நக்குதல் கண்டனை மாமனே-வெறுஞ் சொல்லுக்கே யறநூல்கள் உரைக்கும் துணிவெலாம்" என்று கூறுவது பொருத்தமான கருத்தாகும். மறு விருந்துக்கு வந்த பாண்டவர்களை சகுனி வலிந்து சூதுக்கழைத்தான். தருமன் முதலில் மறுத்தான். அதற்கு சகுனி பதில் கூறும் வகையில் சூதாடுதல், பொழுது போக்குதல், அது அரசர் காக்கும் பழக்கவழக்கங்கள் தானே மன்னர் வல்லினுக்கு அழைத்திடில் மறுப்பது உண்டோ என்றும் " தேர்ந்தவன் வென்றிடுவான் - தொழில் தேர்ச்சியில்லாதவன் "தோற்றிடுவான். இவை சூதென்றும் சதியென்றும் சொல்வாரோ, வல்லவன் வென்றிடுவான், தொழில் வன்மையில்லாதவன் தோற்றிடுவான் " எனறெல்லாம் கேலியாகவும் கிண்டலாகவும் பழய பழ்க்கவழக்கம் என்றும் வாடிக்கை என்றும் பேசினான்.