பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுதளத்தில் பாரதி தோற்றுவாய் பாரதி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில், பாரத நாட்டில் தோன்றிய இணையற்ற பெரிய கவிஞன். பாட்டுக் கொரு புலவன், கவிக்குயில், தேசிய உணர்வையும் நாட்டுப் பற்றையும் ஊட்டிய பெரும்புலவன். நாட்டு விடுதலைக்கும், சமூக சீர்திருத்தத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தனது கவிதைகள், கட்டுரைகள், கதைகள் மூலம் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பிய, புரட்சிகரஜனநாயகப் பெரும் புலவன். பாரதி நாட் டு மக்களிடை யி ல் நிலவிய பல பிரிவு வேறுபாடுகளையும், பாகுபாடுகளையும் சாடினான். பாரத நாட்டின் அனைத்து மக்களின் ஒற்றுமைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடினான். பெண்விடுதலையைப் பற்றி உணர்ச்சி வேகத்துடன் பாடினான். எழுதினான். சாதிவேறு பாடுகளையும் மூடப்பழக்க வழகங்களையும் சாடினான். பாப்பாவைப் பாடினான். நாட்டின் ஒளி மிக்க எதிர்காலத்தை வரவேற்றான். "ந ம க்குத் தொழி ல் கவிதை, நாட்டிற்கு உழைத்த ல் , இமைப் பொழுதும் சோராதிருத்தல் என்று தனது வாழ்க்கையின் இலட்சியத்தை வகுத்துக் கொண்டிருந்தான். இந்த வழியில் அவன் கர்மயோகியாக வாழ்ந்தான். பாரதியின் பாடல்களை நாட்டுப்பாடல்கள், தெய்வப்பாடல்கள், ஞானப்பாடல்கள், சுயசரிதை, சமூகப்பாடல்கள், பாஞ்சாலிசபதம், கண்ணன்பாட்டு, குயில் பாட்டு என்றெல்லாம் இன்னும் தேசபக்திப் பாடல்கள். தெய்வபக்திப்பாடல்கள், பாப்பாப்பாட்டு, புதுமைப்பெண், புதிய ஆத்திசூடி, தனிப்பாடல்கள் பலவகைப்பாடல்கள் வசனகவிைைத என்றெல்லாம் பிரித்தும் தொகுத்தும் வெளியிடப்பட்டுள்ளன. அவர் எழுதிய பலகட்டுரைகளும், கதைகளும் கூட தனியாக வெளியாகியுள்ளன. பாரதி ந ம து நாட் டு மக்கள் வழி ப டு ம் ப ல் வேறு தெய்வங்களைப்பற்றியும், தெய்வீகப் பாத்திரப்படைப்புகளைப் பற்றியும், பாரத தேசத்தைப்பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் தேசீய விடுதலை இயக்கத்தின் தலைவர்களைப் பற்றியும், வரலாற்று சிற்பிகளைப்பற்றியும் கவிஞர்களைப்பற்றியும், இலக்கியச் செம்மல்களைப்பற்றியும், பிற நாட்டு விடுதலை இயக்கங்களைப் பற்றியும் சமுதாயத்தைப் பற்றியும் பெண்விடுதலைபற்றியும், எதிர்காலச் செல்வங்களின் முன்னேற்றம் பற்றியும் திர்க்கமான தெளிவான கருத்துக்களைக் கொண்ட பாடல்களைப் பாடியிருக்கிறான். தனிச் சிறப்பான பாடல்களாக கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, வசன கவிதைகள், இயற்கையைப் பற்றிய பாடல்கள் அமைந்துள்ளன.