பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 85 "சால நன்கு கூறினிர் ஐயா, தருமநெறி பண்டோர் இராவணனும் சீதை தன்னைப் பாதகத்தால் கொண்டோர் வனத்திடையே வைத்துப் பின்கூட்டமுற மந்திரிமார் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே செந்திருவைப்பற்றிவந்த செய்தி உரைத்திடுங்கால் தக்கது நீர் செய்திர்தர்மத்துக் கிச்செய்கை ஒக்கும்" எனக்கூறியுகந்தனராம் சாத்திரிமார் "பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் மாயமுணராத மன்னவனைச் சூதாட வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ? முற்படவே சூழ்ந்து முடித்த தொரு செய்கையன்றோ? மண்டபநீர்கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ? பெண்டிர்தமையுடையீர் பெண்களுடன் பிறந்தீர் பெண்பாவமன்றோ? பெரிய வசை கொள்விரோ? கண்பார்க்க வேண்டும்" கையெடுத்துக் கும்பிட்டாள். பாஞ்சாலி அழுது புலம்பினாள். ஆடை குலைந்து நின்றனள். துச்சாதனன் பேச்சுக்கள் பல பேசி அவளுடைய கூந்தலைப் பற்றி இழுத்தான். இதைக் கண்ட வீமனால் பொருக்க முடியவில்லை. அவனுடைய கோபம் கரைபுரண்டது. அண்ணன் தருமனை நோக்கி ஆவேசமாகப் பேசினான். இந்தக் காட்சியை பாரதி சோகமும் கோபமும் கொண்டு தனது கவிதை வரிகளில் பேசினான். "சூதர்மனைகளிலே - அண்ணே தொண்டு மகளிர் உண்டு. சூதிற் பணய மென்றே - அங்கோர் தொண்டச்சி போவதில்லை "ஏது கருதிவைத்தாய் - அண்ணே யாரைப்பணயம் வைத்தாய் மாதர் குலவிளக்கை - அன்பே வாய்ந்த வடிவழகை "பூமியரசரெல்லாம் - கண்டே போற்ற விளங்குகிறான் சாமிபுகழினுக்கே - வெம்போர்ச் சண்டெனப் பாஞ்சாலன் "அவன் சுடர்மகளை அண்ணே ஆடியிழந்துவிட்டாய் தவறு செய்துவிட்டாய் - அண்ணே