பக்கம்:பாரம்பரியம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுக் கருத்து ஒ மனப்பட்ட அபிப்பிராயம் இதுவரை ஏற்படவில்லை. சிலர் பாரம்பரியமாகவே எல்லாம் அமைகின்றன என்கிரு.ர்கள். சிலர் பிறவியில் ஒன்றும் அமைவதில்லை, சூழ்நிலையாலும் வளர்க்கும் முறையாலும் எல்லாம் அமைகின்றன என்கிருர் கள். இவ்விரு கட்சியார் கூறுவதும் சரியல்ல, பாம்பரியத் தால் சில திறமைகளும் தன்மைகளும், சூழ்நிலையால் சிலவும் அமைகின்றன என்று கூறுவதுதான் சரி என்று வேறு சிலர் கருதுகிருர்கள். பாரம்பரியத்தால் கிடைத்தவை சூழ் நிலையால் மலர்ச்சியடைகின்றன என்று இன்னும் சிலர் மேலே கூறிய கட்சிகளை யெல்லாம் பிணைக்கும் முறையிலே வியாக்கியானம் செய்கிரு.ர்கள். பாரம்பரியமா, சூழ்கிலையா-எது கிறமைகளுக்கும் தன்மைகளுக்கும் காரணமா யிருக்கின்றது என்ற கேள்வி யும் அதற்குச் சரியான விடையும் மக்கட் சமூக வளர்ச் சிக்கு மிக முக்கியமானவைகள். பாாம்பரியமே பிரதானம் என்ற கொள்கையைப் பின்பற்றி ஒரு புதிய உயர்ந்த மனித வர்க்கத்தை உண்டாக்கும் முயற்சியில் ஜெர்மனி போன்ற தேசங்கள் ஈடுபட்டன. ஜெர்மானியர்களே அறி விலும் ஆற்றலிலும் உயர்ந்த ஜாதியினரென்றும். அவர் களுக்குள்ளேயும் குறைந்த மதி நுட்பமும், உடற்கட்டும், தீராத தொத்துநோய்களும் உடையவர்களுக்குச் சந்ததியே ஏற்படாதவாறு சாஸ்திர முறையில் தடுத்து விடுவதால் அடுத்து வரும் மக்கள் மேலும் மேலும் உயர்ந்து விளங்கு வார்களென்றும் அவர்கள் நம்பினர்கள். அதே சமயத்தில் அமெரிக்க நாட்டு உளவியலறிஞ சான வாட்ஸன் போன்றவர்கள் சூழ்கிலேயாலேயே எல் லாம் அமைகின்றனவென்றும், யாருக்கும் எந்த விதமான திறமையையும் உண்டாக்கி விடலாம் என்றும் முழங்கினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/14&oldid=820403" இலிருந்து மீள்விக்கப்பட்டது