பக்கம்:பாரம்பரியம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சியின் அவசியம் 'குழந்தையைப் பார்த்தாயா ? தகப்பனே வரர்த்து எடுத்து வைத்தது.போலவே இருக்கிறது.’ என்று சாதா ாணமாகச் சொல்லுவதை நாம் கேட்டிருக்கிருேம். " தாய்க்கு இருப்பது போலவே பெரிய கண்கள். கிற மும் அவன்ப் போலவேதான். மூக்கு மட்டும் தகப்பன் மூக்குமாதிரி கொஞ்சம் பெரியது" என்ற இப்படியெல் லாம் குழந்தையைப்பற்றிப் பேசிக்கொள்ளுகிருேம். பொதுவாகக் கூறினல் பாாம்பரியமாக உடல் உறுப் புக்களும், நிறமும், தலை முடியின் தன்மையும் அமைகின் றன எனலாம். இதழ்களின் அமைப்பு, கண்களின் வடி வம், பற்களின் வரிசை, தாடை எலும்புகள் எல்ல்ாம் பெற்ருேர் தந்தவை. காதுகளின் வடிவங்கூடப் பாரம் பரியமாகக் கிடைக்கிறது என்று பேராசிரியர் விட்னி கூறு கிருர். கண்களின் கிறமும் அவ்வாறு தான். உடலுறுப்புக்களுக்கும் டிாாம்பரியத்திற்கும் உள்ள கொடர்பைச் சோதனைகள் மூலம் எளிதில் கண்டு பிடிக்க லாம். ஆனல் மனப்பண்பு. கலைத்திறமை முதலியவை கிளேப்பற்றி அவ்வாறு எளிதாகக் காணமுடியாது. ஒருவன் சிறந்த ஒவியனுக இருக்கிருன். அவனுடைய பெற்ருேர் களுக்கோ, மூதாதையர்களுக்கோ ஒவியக் கலையே தெரி யாமலிருக்கலாம். இங்குதான் பாாம்பரியத்தின் தொடர்பை ஆராய்வது கடினம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/17&oldid=820406" இலிருந்து மீள்விக்கப்பட்டது