பக்கம்:பாரம்பரியம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தி மல்லிகையும் எலியும் காங்கயம் காளை கண்ணுக்கு இனிய கம்பீரமான தோற்ற முடையது. அதைக் கண்டு நாம் வியக்கிருேம். அதன் திமில், அதன் கொம்புகள், அதன் கம்பீரமான கடை எல்லாம் மனதைக் கவர்கின்றன. ஆனல் அந்தக் காளே நுாறு வருஷங்களுக்கு முன்பு இவ்வளவு அழகாக இருக்கவில்லை. அதன் கொம்புகள் இவ்வளவு அழகாக முன்பு அமைந்திருக்கவில்லை. வேறு இனச் சேர்த்கையால் அது இப்பொழுது இந்தத் தோற்றத்தைப் பெற்றிருக் கிறது. இன்னும் அதைப் பல வழிகளிலும் அபிவிருத்தி செய்ய முயன்று கொண்டிருக்கிருர்கள். சேலம் ஒட்டு மாம்பழத்தின் சுவையை காம் அனுப வித்திருக்கிருேம். இன்று பெண்மணிகள் ஆசையோடு பல நிறமுள்ள கனகாம்பாத்தைக் கூந்தலில் அணிந்து மகிழ்கிருங்க... இவை யெல்லாம் வேறினச் சேர்க்கை யால் உயர்வடைந்திருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு மெண்டல் என்ற கிறிஸ்து வத் துறவி யொருவர் (1822-1884) ஐரோப்பாவில் பிான் என்ற இடத்திலுள்ள மடத்தில்லிருந்து கொண்டு தாவாங் களிலே வேறினச் சேர்க்கையால் ஏற்படும் பலன்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். எட்டு வருஷங்கள் அவர் பல சோதனைகள் செய்து பாரம்பரியத் தன்மைகள் ஒரு ஒழுங்கான முறையில் அமைகின்றன என்று கண்டு பிடித் தார். அவருக்குப் பின் பலர் இதே துறையில் ஆராய்ச்சி கள் நடத்தி அவர் கூறுவது சரியென்று கண்டிருக்கிருர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/21&oldid=820410" இலிருந்து மீள்விக்கப்பட்டது