பக்கம்:பாரம்பரியம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தி மல்லிகையும் எலியும் is t கள். அதோடு அதைப் பற்றிய அறிவையும் பெருக்கி யுள்ளார்கள். மெண்டல் தாம் கண்டு பிடித்த விஷயங்களை 1865-ஆம் வருஷம் வெளியிட்டார். ஆனல் அவற்றைப் பற் றிச் சுமார் 50 வருஷம் யாருமே கவனிக்கவில்லை. 1900-ஆம் ஆண்டிலே மூன்று தாவா சாஸ்திரிகள் தாம் தனித் தனியே கண்டு பிடித்த விஷயங்களை ஒப்பிட்டுப் பார்ப்ப தற்காகப் பழைய விஞ்ஞானப் பத்திரிகைகளேப் புரட்டிப் பார்க்கும்போது மெண்டலின் ஆராய்ச்சியைப்பற்றி அறிக்கார்கள். அன்று முதல்தான் அவருடைய சோதனை களின் பெருமை வெளிப்படலாயிற்று. பலர் அவர் செய்க ஆராய்ச்சிகளைப் பின்பற்றிச் சோதனை நடத்தினர்கள். அந்தி மல்லிகையைப் பார்த்திருக்கிறீர்களா? அதிலே சிவப்பு நிறமாகப் பூக்கும் ஒரு இனமும், வெள்ளே கிற மாகப் பூக்கும் ஒரு இனமும் இருக்கின்றன. மெண்டல் அவற்றை எடுத்துக்கொண்டார். அவ்விரண்டு இனங்களே யும் சேர்த்தால் என்ன ஆகிறது என்று அவர் சோதனை செய்யலானர். இந்தச் சமயத்திலே நாம் ஒரு விஷயத்தை ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டும். பூ எவ்வாறு காயாக மாறு கிறது? சில பூக்கள் காயாக மாறுவதே இல்லை. அவற் றைப் பற்றி நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியதில்லை. பல பூக்கள் காயாவதை நாம் அறிவோம். அவை எவ் வாறு காயாகின்றன என்பதையே நாம் இங்கு சிந்திக்க வேண்டும். பூவிலே மகரந்தத் தாள் இருக்கிறது. அக் தாளிலே ஆண் தன்மை யுடையதும், பெண் தன்மை உடையதும் உண்டு. அவை இரண்டும் சேரும்போது பூ காயாக மாறுகிறது. ஒரு பூவிலேயே இரண்டு தன்மைகளையுடைய மகரந்தமும் இருப்பதுண்டு. அவை கலப்பதற்குத் தேனிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/22&oldid=820411" இலிருந்து மீள்விக்கப்பட்டது