பக்கம்:பாரம்பரியம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பாரம்பரியம் பற்றி நன்கு தெரிந்து கொண்டால் பாாம்பரியத்தின் தொடர்பைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். இதுவரை பாாம்பரியத் தன்மை அமைவதாயின் அது அணுக்களின் மூலமாகத்தான் ஏற்பட முடியும் என்று கண்டோம். இனி அணுக்கள் எவ்வாறு பாரம்பரியத் தன் மையைக் கொண்டு வருகின்றன என்று பார்ப்போம். உடம்பிலுள்ள அணுக்களெல்லாம் ஒரே ஒரு அணுவி லிருந்து பிரிந்து பிரிந்து உண்டானவையென்று முன்பே அறிந்திருக்கிருேம். ஆதலால் அந்த முதல் அணுவை நன்கு ஆராய்ந்து அதன் பல பாகங்களைப் பற்றித் தெரிந்துகொண் டோமால்ை பாரம்பரியத் தன்மைகள் எவ்வாறு தொடர்ந்து வருகின்றன என்பதை ஒருவாறு நிச்சயிக்க முடியும். அந்த முதல் அனுத்தான் பூரித்த அண்டம் அல்லது கருமூலம் (Fertilised Egg) என்ற சொல்லப்படுகிறது. இவ்வர்ம சொன்னவுடன் அண்டம் என்பதென்ன ; அது எவ்வாறு பூரிக்கிறது என்ற கேள்விகள் பிறக்கும். ஆனும் பெண்ணும் கூடுவதாலே மனிதக் கருவுண் டாகிறதென்பது அனைவருக்கும் தெரிக்க விஷயம். அவ் வாறு கருவுண்டாவதற்குக் காரணமாக உள்ளவை பெண்ணி டத்துத் தோன்றும் அண்டமும் ஆணிடத்து உண்டாகும் விந்தணுவுமாகும். அண்டம் சாதாரணமாக மாதத்திற்கு ஒன்று தான் வெளிப்படுகின்றது; அது கருப்பையை நோக்கி வந்துகொண்டிருக்கிற காலத்தில் விக்தனுவோடு கலக்க நேரிட்டால் உடனே பூரித்துக் கருவாக மாறிவிடுகிறது. பூரித்த அண்டமே முதல் அனு: அது பிரிந்து பிரிந்து பல உறுப்புக்களாக உருவடைகின்றது. (இந்த விஷயத் கைப்பற்றி கருவில் வளரும் குழந்தை என்ற நூலில் விரி வாகக் கூறியிருக்கிறேனதலால் இங்கு அடுத்த பகுதியில் சுருக்கமாகவே விளக்கியுள்ளேன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/31&oldid=820421" இலிருந்து மீள்விக்கப்பட்டது