பக்கம்:பாரம்பரியம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பாரம்ப்ரியம் இதில் ஒரு முக்கிய வித்தியாசமட்டும் உண்டு. கடைசி யாகப் பிரியும் 4 அனுக்கள் ஒவ்வொன்றிலும் 24 கிறக் கோல்கள் இருக்கின்றன அல்லவா? இவை நான்கிலும் ஒன்றே. முதிர்ச்சி அடைந்து உயிருடன் இருக்கின்றது. மற்ற மூன்றும் கசித்துவிடுகின்றன. இவ்வாறு மாதத்திற்கு ஒரு அண்டமே முதிர்ச்சி பெற்று வெளியாகின்றது. எந்தச் சமயத்தில் அண்டம் வெளியாகின்றதென் பதை நிச்சயமாகச் சொல்லுவதற்கில்லை. கருமூலக்குழா யில் இது வந்துகொண்டிருக்கும்போது புணர்ச்சியால் வெளியான விந்தனுக்களில் ஒன்று இதைச் சந்தித்தால் பூரிக்கின்றது. அவ்வாறு பூரித்துக் கருவாகும் அண்டக் திலே பழையபடி நிறக்கோல்கள் 24 ஜோடிகளாய் விடுகின் றன. அவைகளில் பாதி விந்தணுவிலிருந்து வந்தவை. மற்ற பாகி அண்டத்திலிருந்தவை. இவ்வாறு பூரித்த அண் டத்திலுள்ள கிறக்கோல்களுக்கு ஆணும் பெண்ணும் சரிசமானமாகக் காரணமாகின்றனர். பாரம்பரியத் தன்மைகள் அமைய வேண்டுமானல் இந்த நிறக்கோல்களின் மூலமாகவே அமைய வேண்டும். அதுபற்றி இனிமேல் ஆராய்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/43&oldid=820434" இலிருந்து மீள்விக்கப்பட்டது