பக்கம்:பாரம்பரியம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீன் 35 ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இம் மாறுபட்ட ஜோடி சில உயிர்களிலே அண்டத்தில் இருப்பதுண்டு. அவற்றின் காரணத்தைப் பின்னல் ஆராய்வோம். பாரம்பரியத் தன்மைகளைப்பற்றி. ஆராய்வதற்கு இந்த ஈக்கள் பெரிதும் சாதகமாக இருக்கின்றன. ஏனென்ருல் அவை பத்து நாட்களுக் கொருமுறை குஞ்சு பொறிக்கின் றன. ஒவ்வொரு தடவையிலும் நூற்றுக் கணக்கான குஞ்சுகள் தோன்றுகின்றன. மேலும் இந்த ஈக்கள் மிகச் சிறியவையா யிருப்பதால் ஒரு சாதாரணக் கண்ணுடிப் புட்டியிலே இவைகளே அடைத்து வளர்த்துவிடலாம். ஒரு இாண்டு வருடம் இவற்றை வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்தோமானல் எழுபது தலைமுறைகளைப்பற்றித் தெரிந்து கொள்ளமுடியும். வேறு பிராணிகளே வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்வதில் இத்தனை செளகரியங்கள் கிடைப்ப தில்லை. மனித வர்க்கத்திலே எழுபது தலைமுறைகளை ஆாாய்வதற்கு எத்தனையோ ஆண்டுகளாய்விடும். மேலும் அகில் எவ்வளவோ சிக்கல்களும் உண்டு. ஆதலால் இந்த ஈக்களே பாரம்பரியத் தன்மைகளே ஆராயப் பெரிதும் பயன் பட்டு வருகின்றன. இந்த ஈயின் நிறக்கோல்களிலுள்ள ஜீன்களினல் ஏற் படும் உடலுறுப்புக்களின் தன்மை, நிறம் முதலியவற்றைப் பற்றி நன்கு கண்டுபிடித்திருக்கிருர்கள். அதன் கால்கள் ஜோடியாக வளர ஒரு ஜீன் உதவுகிறது; ஒரு ஜீன் அதன் சிறகுகளின் வடிவத்தை அமைக்கின்றது. சில ஜீன்கள் கண்ணின் வடிவத்தையும், நிறத்தையும் நிர்ணயம் செய் கின்றன; இன்னும் சில தேகத்தின் நிறத்தைத் திட்டம் செய்கின்றன. சுருங்கக் கூறினல் இந்த ஈயின் ஒவ்வொரு சிறு அங்க அமைப்பிற்கும் காரணமான ஜீனேப்பற்றி ஆராய்ந்து தெரிந்திருக்கிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/46&oldid=820437" இலிருந்து மீள்விக்கப்பட்டது