பக்கம்:பாரம்பரியம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன பெண்ணு எனது நண்பர் ஒருவர் தமது முதல் மனைவி உயிருடனிருக்கின்ற பொழுதே வேருெரு கலியாணம் செய்து கொண்டார். காரணமென்ன வென்ருல் குழங் தைகளெல்லாம் பெண்களாகவே பிறந்தன என்பதுதான். ஆண் குழந்தை இல்லாவிட்டால் குடியே முழுகிப்போய் விடுவதாகப் பலர் எண்ணுகிரு.ர்கள். அது மட்டுமா? மனைவி யின்மேல் கோபங் கொள்ளுவதும் சகஜம். அவள் மேலே ஒரு பெரிய பழிவந்து சேருகிறது. இப்படிப் பல இடங்களில் நடக்கின்றது. ஆனல் குழந்தை ஆணுகவோ பெண்ணுகவோ பிறப்பதற்கு அதன் தாயார் காரணமல்லவென்று சொன்னல் நீங்கள் ஆச்சரி யப்படுவீர்கள். அதோடு குழந்தையின் தகப்பன்தான் அதற்குக் காரணம் என்ருல் இன்னும் ஆச்சரியம் அதிக மாகும். உண்மை அப்படித்தான். மனிதனுடைய உயிரணுவிலே 24 ஜோடி நிறக் கோல்கள் இருக்கின்றன என்றும், பெண் அணுவிலே ஒவ்வொரு ஜோடியின் உருவமும் ஒரேமாதிரி இருக்கிற தென்றும், ஆண் அனுவில் 23 ஜோடிகள் அவ்வாறிருக்க ஒரு ஜோடி மட்டும் உருவத்தில் வேற்றுமைப்பட்டிருக்கிற தென்றும் முன்பே அறிந்திருக்கிருேம். இம்மாதிரி உருவ வேறுபாடுள்ள நிறக்கோல்கள்தான் ஆணுவ தற்கும் பெண்ணுவதற்கும் காாணம். பெண் அணுவி லுள்ள 23 ஜோடி கிறக்கோல்களே உருவ ஒற்றுமைப்படி ஆண் அணுவிலுள்ள 23 ஜோடிகளுடன் பொருத்தி வைக்க முடியும். அப்படி வைத்தால் எது பெண்ணிடத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/63&oldid=820456" இலிருந்து மீள்விக்கப்பட்டது