பக்கம்:பாரம்பரியம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பாரம்பரியம் ஆராய்ந்து நிச்சயமான ஒரு முடிவுக்கு வருவதில் எத்த னேயோ இடைஞ்சல்கள் இருக்கின்றன. மனத்திட மற்ற வர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மனக்கிட மற்றவர் களாகவும், இழிந்த செயல்களைச் செய்பவர்களாகவும் இருக் கலாமென்று மேலே குறிப்பிட்டேன். அப்படிச் செய்யும் இழிந்த செயல்களுக்குப் பாரம்பரியந்தான் காரணமென்று நிச்சயமாகச் சொல்ல முடிவதில்லை; ஏனென்ருல் சூழ்நிலை யும் அதற்குக் காரணமாக இருக்கிருக்கலாம். குற்றம் புரி யும் ஜாகிகளென்றே சில கூட்டத்தாரை இப்பொழுதும் நம் நாட்டில் ஒதுக்கி வைத்திருக்கிருர்கள். அவர்களு டைய சூழ்நிலையும், பொருளாதார நிலையுமே அத்தன் மைக்குக் காரணமாக இருக்கலாமல்லவா? அச்சாதியார் களில் சிலர் தமக்கு கிடைத்த படிப்பு, உத்தியோகம், அந் தஸ்து முதலியவற்றின் காரணமாக நல்ல ஒழுக்கமான வாழ்க்கையைப் பலரும் போற்றும்படி கடத்தி வருவதை நாம் பார்க்கிருேம். இதைப் போலவே நல்ல திறமைகள் அமைவதிலும் பாரம்பரியத்தின் பங்கை நிர்ணயிப்பதில் சில சிக்கல்கள் தோன்றுகின்றன. பொதுவாகப் பாரம்பரியத்தினுல் கிற மைகள் அமையுமென்று கூறலாமே ஒழிய அதுவேதான் காரணமாக இருக்க முடியும் என்று வாதிக்க இயலாது. மிகுந்த திறமைசாவிகள் தோன்றிய சில குடும்பங்களின் வம்சாவளியை எடுத்துக் கொண்டு ஆராய்ந்து பார்த்தகில் அப்படிப்பட்ட திறமைகள் அமைவதில் பாரம்பரியம் காா ணமாக இருப்பது தெரிந்தது. கால்ட்டன் (Galton) என்பவர் 977 பிாமுகர்களையும் 977 சாதாரணமான மனிதர்களையும் எடுத்துக் கொண்டு அவர்களுடைய சுற்றத்தார்களைப் பற்றி ஆராய்ந்தார். பி.ா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/73&oldid=820468" இலிருந்து மீள்விக்கப்பட்டது