பக்கம்:பாரம்பரியம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரம்பரியமும் சூழ்நிலையும் წg இாண்டு பேருக்கு ஒரே மாதிரியான பாாம்பரியத் திறமை அமைந்திருக்கலாம். இருந்தாலும் ஒருவன் வாழ்க் கையிலே அதிகமாகப் பிரகாசிப்பான்; மற்றவன் அவ்வாறு பிரகாசியாமலிருக்கலாம். அதற்குக் காாண்ம் சூழ்நிலையே யாகும். ஒருவனுக்கு ஏற்பட்டுள்ள ஏதாவதொரு திறமை பாரம்பரியமாக வந்ததா அல்லது சூழ்கிலேயால் அமைக் ததா என்பதை நிச்சயமாகச் சொல்வது கடினம். ஒரு பஞ்சாலை முதலாளியின் மகன் அதே தொழிலை நிர்வாக்ம் செய்கிருனென்ருல் அதற்காக அவனுக்குத் தனிப்பட்ட பாம்பரியத் திறமை ஏற்பட்டிருக்கின்றதென்று கூற முடியாது. தங்தை அதைச் செய்ததால் மகனுக்கும் அந்தச் சந்தர்ப்பம் வாய்த்ததென்றுதான் சொல்ல வேண் டும். ஒரே குடும்பத்தில் சேர்ந்த இரு குழந்தைகளே அவற் றின் ஐந்தாவது வயதில் கவனித்தால் உயரத்திலோ, பரும னிலோ ஒத்திருப்பதில்லை. இரண்டு பேருக்கும் ஒரே வித மான போஷணையும் பராமரிப்பும் இருந்தாலும் சில சமயங் களில் இவ்வித்தியாசம் மிக அதிகமாகக் காண்கின்றது. இதற்குக் காரணம் பாாம்பரியமே. போஷணையில் வித்தி யாசமேற்பட்டால் அதன் மூலமும் உருவ வேறுபாடு எற் படலாம். இது சூழ்நிலையின்பாற்பட்டது. பாரம்பரியம், சூழ்நிலை இாண்டின் காரணமாகவும் உருவ வேறுபாடு உண்டாகலாம். அதே போல மனத்திறமைகளிலும் பாரம் பரியத்தாலும், சூழ்நிலையாலும் அல்லது இவை இாண்டின லும் வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. பாரம்பரியத்தால் மட்டும் ஏற்படுவனவற்றை ஆராய் வதற்குச் சூழ்நிலையை மாறுபட விடாமல் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோலச் சூழ்நிலையால் ஏற்படுவனவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/80&oldid=820476" இலிருந்து மீள்விக்கப்பட்டது