பக்கம்:பாரம்பரியம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பாரம்பரியம் குட்டிகள் வாலுடன்தான் பிறந்தன. வாவில்லாத வம்சம் உண்டாகவில்லை. மேற்கூறிய காரணங்களால் லாமார்க்கின் கருத்துச் சரி யானதல்ல என்று அறியலாம். எலிகள் தாமாகவே தமக்கு வாலில்லாமல் இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தால் நாளடைவில் அது மறைந்திருக்கும்; அப்படியில்லாமல் நாம் வெட்டுவதால் புதிய தலைமுறையில் வால் மறைத்து விடாது என்று கூறும் வேருெகு கொள்கை உண்டு. இக்கொள்கையின்படி உயிர் வர்க்கத்தின் மனத்திலிருக்கும் ஒரு விருப்பத்தின் படி பரிணுமமான த எதாவது ஒரு குறிப்பிட்ட வழியிலே ஏற்படுகிறதென்று சிலர் வாதிக்கிருர்கள். ஆனல் இக் கொள்கையும் சரியானதாகத் தோன்றவில்லை. ஏனென்ரில் சடிதி மாற்றமானது ஏதாவது ஒரு குறிபிட்டபடி நடப்பதே யில்லை. அது பலபடியாக ஏற்படுகின்றது. அப்படி ஏற்படுவதால் உண்டாகும் புது உயிர்களில் எது இயற்கையை அனுசரித்து வாழ்கிறதோ அது பெருகுகின் றது. மற்றவை மறைந்து விடுகின்றன. ஆகவே நான் முதலிலே கூறியபடி சடிதிமாற்றத் தால் தோன்றும் புதிய உயிர் வர்க்கங்களில் இயற்கையை அனுசரித்துப் பெருகுகின்றAவர்க்கங்களின் மூலமாகவே பரிணுமம் எற்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/95&oldid=820492" இலிருந்து மீள்விக்கப்பட்டது