பக்கம்:பாரி வேள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ரு ம ன ம்

கபிலர் உயிர்நீத்ததை அறிந்த அங்கவையும் சங்க வையும் துடித்துப் போயினர். தம் தந்தையை இழந்த போதுகூட அவர்களுக்கு அத்துணைத் துயரம் உண் டாக வில்லை.

மணமாகாத கன்னிப் பெண்களாக வாழ்ந்த அவர் களைப் புலவர் உலகம் மரியாதையோடு பாராட்டியது. புலமை மிக்க ஒளவைப் பிராட்டியார் பாரிவேளை நன்கு அறிந்தவர். கபிலர் பெருமையையும் உணர்ந்தவர். அவருக்குக் கபிலர் தீப் பாய்ந்த செய்தியோடு, பாரி யின் மகளிர் அந்தணர் வீட்டில் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. அவ்விடத்துக்குச் சென்று பாரி மகளிரைக் கண்டார். - .

ஒளவையாரைக் கண்டதும் அந்த மகளிர் இருவரும் புலம்பி அழுதார்கள். கடல் உடைத்துக் கொண்டதுபோல, அதுகாறும் தேங்கி யிருந்த துயரம் வெள்ளமாகப் பொங்கியது. "எங்களுக் காகக் கபிலர் எத்தனை தொல்லைகளை அடைந்தார்! எங்களால்தான் மனம் வெறுத்துப் போய் உயிரை

மாய்த்துக்கொண்டார். நாங்கள் பூமிக்குப் பாரமாக வாழ்கிருேம். அந்தப் புலவர்பிரான் புண்ணியம் பண்ணியவர். எங்கள் தந்தையாருடன் சேர்ந்து கொண்டார். நாங்களோ எல்லாவற்றையும் இழந் தோம். எல்லாரையும் இழந்தோம். நாளைக்கு என்ன நிகழப் போகிறது என்று தெரியாமல், யாருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/101&oldid=583919" இலிருந்து மீள்விக்கப்பட்டது