பக்கம்:பாரி வேள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பாரி வேள்

உன்னைக் காண்பதற்கா நான் பிரிந்து சென்றேன்!" என்று புலம்பினர். "எந்தப் பாதகனுக்கு உன்னைக் கொல்ல மனம் வந்தது! பறம்பு நாட்டையும் மலையை யும் கேட்டாலும் கொடுத்திருப்பாயே! உன் உயிரை வாங்கிவிட்டானே, பாவி அதனல் அவன் பெற்ற பயன் என்ன?' என்று அரற்றினர்.

'மதுரையும் சங்கமும் எனக்குக் கசந்து போகும் படியாகச் செய்த உன் அன்பு என்னை இந்த மலைக்கு இழுத்துக்கொண்டு வந்ததே என் உயிராகவே உன்னை நேசித்தேனே! நான் இறக்க, அப்போது என்னினும் இளையணுகிய நீ புலம்பும் புலம்பலை உலகம் கேட்பது முறையாக இருக்க, நான் உன்னை இழந்து புலம்புவதைக் கேட்க நேர்ந்தது விதி செய்த கொடுமையல்லவா?" என்று அழுதார். கபிலர் தேம்பித் தேம்பி அழுவது கண்டு அவருக்கும் பாரிக் கும் உள்ள அன்புத் தொடர்பை மக்கள் நன்கு உணர்ந்து கொண்டனர். * -

பறம்பு மலை உயிரை இழந்தது; பறம்பு நாடு தலைவனை இழந்தது; புலவர்கள் தங்கள் அரும்பெறல் புரவலனை இழந்து வாடினர்கள். தமிழுலகமே பாரி யின் மறைவுக்கு வருந்தியது. "இப்படிக் கரவாக அவ் வள்ளலைக் கொல்லவும் ஒருவனுக்கு மனம் வந்ததே! முல்லைக் கொடியின் தளர்ச்சி கண்டு அதைப் போக்கத் தன் தேரையே நிறுத்தி வைத்த கருணையாளனைச் சிறிதும் இரக்கமின்றி வஞ்சகமாகக் கொல்ல எப்படித் தான் மனித உள்ளம் துணிந்ததோ! அத்தகைய ... வலிய உள்ளம் படைத்தவர்களும் இந்த உலகில் இருக்கிருர்களே! பாரியைக் கொல்லும் கொடுமையை - யுடைய அவர்களால் உலகத்துக்கு இன்னும் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/75&oldid=583893" இலிருந்து மீள்விக்கப்பட்டது