பக்கம்:பாரி வேள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துயர் வெள்ளம்

கபிலரும் பாரியும் ஈருடலும் ஒருயிருமாக வாழ்ந்த வர்கள். பாரியின் பிரிவினுல் கபிலரும் உயிர்நீத் திருப்பார். ஆலுைம் அவர் தம் கடமையை எண்ணி, போகின்ற உயிரைத் தாங்கி நின்ருர். பாரியின் மகளி ராகிய அங்கவை, சங்கவை என்னும் இருவரையும் அநாதைகளாக விட்டுச் செல்ல அவர் விரும்பவில்லை. அவர்களைத் தக்க இடத்தில் சேர்த்துவிட்டே தமக்கு முடிவைத் தேடவேண்டும் என்று தீர்மானித்தார்

ஒரு நாட்டுக்கு அரசன் மறைந்தால் உடனே பகையரசர்கள் அந் நாட்டைப் பற்றிக்கொள்வார்கள். பறம்பு நாட்டுக்குத் தலைவனுகிய பாரி இறந்து படவே அருகில் உள்ள பகை மன்னர் அந் நாட்டைக் கைப் பற்றத் தொடங்கினர். "இனி இங்கே இருந்தால் பாரியின் மகளிருக்கும் தீங்கு உண்டாகும்' என்று அஞ்சிக் கடவுள் அருளையும் தம் புலமையையும் நம்பிக் கபிலர் புறப்பட்டுவிட்டார். -

ஒரு நாள் இரவு நல்ல நிலா வீசிக்கொண்டிருக்கும். நேரத்தில் அந்த இளம் பெண்களை அழைத்துக் கொண்டு பறம்பு மலையை விட்டுப் புறப்பட்டுப் போக லானர். அத்த்ன காலம் தமக்கு இடம் அளித்த அம் மலையைப் பிரிய மனமின்றி மிக்க வருத்தத் தோடே நடந்தார். அந்த இளம் பெண்கள், வள வாழ்க்கையில் இன்புற்றவர்கள்; தமக்கு நேர்ந்த கதியை உணர்ந்து மறுகினர்கள். கபிலர் பற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/77&oldid=583895" இலிருந்து மீள்விக்கப்பட்டது