பக்கம்:பாரி வேள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 : பாரி வேள்

உண்மையிலே பரிசிலரைத் தாங்கும் பண்புடையவ கை இருந்தான். பறம்பை முற்றுகையிட்டவன் சேரர் குலத்தில் வேருெரு கிளையில் தோன்றிய மன்னன். வாழியாதனே அவனைப் போலன்றி நேர்மையும் ஈகை யும் உடையவனுக விளங்கினன்.

கபிலர் தன்னை நாடி வந்திருப்பது தெரிந்து அவன் அவரை எதிர்கொண்டு அழைத்துச் சென் ருன்; பலவகையாக உபசரித்தான். அப்போது கபிலர், "நான் இங்கே எதையும் இரந்து கேட்கும்பொருட்டு வரவில்லை. எதையும் மிகைப்படுத்திக் கூற மாட்டேன். பாரியை இழந்த பிறகு அவனைப்போல யாரும் இல்லை என்று எண்ணியிருந்தேன். நீ சிறந்த கொடை வள்ளலாக விளங்குகிருய் என்று கேள்வியுற் றேன். உன்னைப் பார்த்துச் செல்லலாம் என்று வந்தேன்' என்ருர்.

'எந்தக் கருத்தோடு வந்தாலும், நீங்கள் என்ன யும் பொருட்படுத்தி வந்தது கிடைத்தற்கரிய பேறென்றே கருதுகிறேன்' என்று சேரமான் அன்பு ததும்பக் கூறினன். . . . . கபிலர் வஞ்சிமா நகரில் சில காலம் தங்கியிருந் தார். சேரமானுடைய சிறந்த பண்புகளைக் கண்டு. மகிழ்ந்தார். அவன்மீது பத்துப் பாடல்களைப் பாடினர்." பின்பு, அம் மன்னனிடம் விடை பெற்றபோது அவன் பொன்னும் பொருளும் தந்ததோடு பல ஊர்கள் அடங்கிய ஒரு நாட்டையே அளித்தான். அவற்றைப் பெற்றுக் கொண்ட கபிலர் நேரே பாரிமகளிர் வாழும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். தாம் பெற்ற * இப் பாடல்கள் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தாக அமைந்திருக்கின்றன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/97&oldid=583915" இலிருந்து மீள்விக்கப்பட்டது