பக்கம்:பாரும் போரும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 15 நபிநாயகத்தைக் கல்லாலடித்துத் துன்புறுத்திய கயவர் தாமே நாம்! கலீலியோவைக் கடுஞ் சிறையிலிட்ட கல் நெஞ்சர் தாமே நாம்! காந்தியடிகளே விட்டோமா? அவரையும் சுட்டுக் கொன்ருேம் ! * ஆனல் அவர் அறிவுரையை உணருங்காலம் தொலைவில் இல்லை. விரைவில் உணரப்போகிருேம்; உணரவேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைத் திருப்பிக்கொடு என்பது வாய் வேதாந்தமாக இருந்து பயனில்லை. இன்ன செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு என்று மேடையில் பேசிப் பயனில்லை. செயலில் காட்ட முயலவேண்டும். ஒன்று செய் நன்று செய்; அதுவும் இன்று செய்’ என்பது மேலோர் கூற்று. இவ்வுண்மையை உலக மக்கள் உணரவேண்டும். அதுவும் அணுகுண்டை யும், நீர்வளிக் குண்டையும் கையிற்கொண்டு, உலக அரங்கில் அம்மானை ஆடும் வல்லரசுகள் உணர வேண்டும். அவ்வழிவுக் கருவிகளால் உலகம் சுடு காடாக மாறி, மனிதப்பூண்டு மாண்டொழிவதற்கு முன் உணர வேண்டும். அது வரையில் இவ்வுல கிற்கு மீட்சி இல்லை. 'யாதும் ஊரே ; யாவருங் கேளிர்!’ -ജ്ജl

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/122&oldid=820521" இலிருந்து மீள்விக்கப்பட்டது