பக்கம்:பாரும் போரும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

வெறியர்களும், பேராட்சி வெறியர்களும் (Imperialists) இவ்வாறு போரைப் பற்றியும், போரின் அவசி யத்தைப் பற்றியும் புகழ்ந்து பேசுவதில் வியப் பொன்றுமில்லை. ஆனல் பேராசிரியர்களும் தத்துவ அறிஞர்களுங்கூட இவ்வாறு பேசினர். இங்கிலாந் தில் வாழ்ந்த பேரறிஞர் இரஸ்கின் (Ruskin) காந்தி யாருக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் ; பொரு விரியல் வல்லுநர். அவர் தம்முடைய நூலொன்றில் பின்வருமாறு கூறுகின்ருர்:

" சுருங்கக் கூறின் நான் கண்ட உண்மை இது தான். பெருநாடுகள் எல்லாம் தங்கள் சொல்லின் உண்மையையும், எண்ணத்தின் வலிமையினையும் போரிலே கண்டு சமாதானத்திலே இழக்கின்றன. போர் அந்நாடுகளுக்கு நல்லறிவு கொளுத்துகிறது. சமாதானம் அவற்றை வஞ்சிக்கிறது. போர் அவர் களுக்கு நல்ல பட்டறிவையும், பயிற்சியையும் அளிக் கிறது. சமாதானம் அவற்றைக் காட்டிக்கொடுக் கிறது. இன்னும் சொல்லப் போனுல் அந்நாடுகள் போரில் உயிர்பெற்றுச் சமாதானத்தில் செத்து மடிகின்றன.

இரஸ்கின் எத்தகைய வடிகட்டின பேராட்சி வெறியராக இருந்தார் என்பதற்கு அவருடைய நூலி லிருந்து இன்னுமொரு மேற்கோள் தருகிறேன் :

“இங்கிலாந்து பின்வரும் கடமையைச் செய்ய வேண்டும் அல்லது சாகவேண்டும். அதாவது, அது தான் கால் வைக்கும் எல்லாப் பயனுள்ள இடங்களையும் கைப்பற்றிக் கொண்டு, அங்குக் குடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/13&oldid=595525" இலிருந்து மீள்விக்கப்பட்டது