பக்கம்:பாரும் போரும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

வழங்குவான். தம் படை வலிமையிழந்த காலத்தில் பகைவராற் சாதலே விரும்பாத வீரர் சிலர் தம்மேல் ஏற்பட்ட புண்ணேத் தாமே கிழித்துக்கொண்டு உயிர் விடுவர். இவை யாவும் காஞ்சித் திணைக் குரிய செயல்களாம்.

நொச்சி :

பகை மன்னர் தன்னுடைய மதிலின் புறத்தே வந்து முற்றுகை செய்த காலத்தில் அரசன் நொச் சிப் பூவையேனும், மாலையையேனும் சூடித் தன் மதிலேக் காத்து நிற்பான். நொச்சி சூடிய வீரர்கள், மதிலேச் சூழ்ந்த படையை எதிர்த்துப் போரிடுவர். காவற்காடும் அகழியும் சிதையாமல், முற்றுகையிடும் வீரர்களே வெற்றிகொள்வர்.

பகைவரால் விடப்பட்ட குதிரை மதிலுக்குள் தாவிவரும். மதிலில் நின்று போர் புரியும் வீரர் சிலர் இறக்க, அவர்களுடைய உடலின் பகுதிகள் மதிலுக் குப் புறத்திலும் அகத்திலும் சிதறிவிழும். பகை வரின் தாக்குதலுக்கு அஞ்சிச் சில வீரர் பின்வாங்க, வேறு சிலர் அச்செயலுக்குச் சினந்து மதிலேக் காப் பர். மதிலிலுள்ள வீரர் மகளை வெளியிலுள்ள பகை வர் விரும்பி வேண்ட, அதற்கு இணங்காமல் வீரம் பேசுதல் நொச்சியார் இயல்பு.

உழிஞை : - பகையரசருடைய மதிலைக் கைக்கொள்ளக்

கருதிப் படையெடுத்துச் செல்லும் மன்னர், உழிஞைப் பூவைச் சூடிச் செல்வர். குடையையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/28&oldid=595555" இலிருந்து மீள்விக்கப்பட்டது