பக்கம்:பாரும் போரும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

(lliad), ஒதீசியம் (Odyssey) ஆகிய இரு அமரகாவியங் களும், அன்றைய கிரேக்க நாட்டின் புகழ் மணத் தைப் பரப்பிய வண்ணம் நம் கண்ணெதிரே தோன் றுகின்றன. உலிசிஸ், அகில்லிஸ், ஹெக்டர், ஹெர் குலிஸ் போன்ற அரியேறுகள் விளேத்த வீரம் நம் கண்முன் நிழலாடுகிறது. ஏதென்ஸ் நகரின் எழில் மிக்க சிற்பங்களும், கலைக் கூடங்களும் தோன்ற நிற்கின்றன. அந்நகரின் முச்சந்தியில் பேரறிஞர் சோக்ரதர் (Socrates) மக்களின் அறியாமை இருளைத் தம் பகுத்தறிவுத் தீவர்த்தியால் விலக்குகிருர். மாவீ ரன் அலெக்சாந்தர் பாருலகம் கண்டும் கேட்டுமிராத தன் பெரும் படையின் அணிவகுப்பைப் பாரசீகப் பேரரசை நோக்கிச் செலுத்தி, அதைச் சுடுகாடாக்கு கிருன். இச்செய்திகள் யாவும் பண்டைக் கிரேக்க நாட்டின் படப் பிடிப்புகள். -

கலைக்கும் நாகரிகத்திற்கும் ஒரு கலங்கரை விளக்கமாக நின்று விளங்கிய கிரேக்க நாடு, வற்ருத பேராறுகளும், வளங்கொழிக்கும் சமவெளிகளும் அற்ற ஒரு மலைநாடு. மலைப் பகுதிகளில் வாழும் மக் கள், இயற்கையிலேயே உடற்கட்டும், வன்மையும், சகிப்புத் தன்மையும், போர் வெறியும் கொண்டவர் கள். கிரேக்கர்கள் இந்தோ-ஆரிய (Indo-Aryan) இனத்தைச் சேர்ந்தவர்கள்; அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள். போர் அவர்களுக்குப் பொழுது, போக்கு. வீரம் மிக்கவன் கிரேக்க சமுதாயத்தில் மிகவும் சிறந்தவகை மதிக்கப்பட்டான். கிரேக்க மக ளிர், வீரம் மிக்க ஆடவரை விருப்பொடு மணம் ஏற் றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/40&oldid=595579" இலிருந்து மீள்விக்கப்பட்டது