பக்கம்:பாரும் போரும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

யர் குறிப்பிடுகிருர். அப்போர்க் களத்தில் அராபியர் வெற்றியடைந்திருந்தால், ஐரோப்பிய வரலாறே மாற்றியமைக்கப்பட்டிருக்கும். அவர்கள் நேரே கான்ஸ்டாண்டிநோபிளுக்குச் சென்று கீழ் உரோமப் பேரரசையும், வழியிலுள்ள வேறு பல நாடுகளையும் வென்றிருக்கக் கூடும். ஐரோப்பாவின் மதம் கிருத் தவமாயிருப்பதற்குப் பதிலாக இஸ்லாமாக மாறி இருக்கும். வேறு பல பெரும் மாறுதல்களும் விளைந் திருக்கும். இருந்தாலும் அராபியர் ஸ்பெயினில் தங் கிப் பல நூற்ருண்டுகள் ஆட்சி புரிந்தனர்.

அராபியப் பேரரசு உயர்நிலையில் இருந்த பொழுது, ஸ்பெயினிலிருந்து மங்கோலியா வரையில் உள்ள நாடுகள் யாவும் அதில் அடங்கியிருந்தன. டமாஸ்கஸ், பாக்தாது போன்ற இலக்கியப் புகழ் பெற்ற மாநகரங்கள் தோற்றுவிக்கப்பட்டன. கண் கவரும் அரண்மனைகளும், பண்கமழும் இசை மண் டபங்களும், விண் தவழும் மசூதிகளும், ஆட லரங்குகளும், பூங்காக்களும் அந்நகர்களே அழகு செய்தன. செல்வமும், ஆடம்பரமும் செழித்து விளங்கின. கவிஞரும் கலைஞரும் கணக்கற்றவர் வாழ்ந்தனர்...ஆம்; அது பொற்காலம் !... ஆனல், அவ்வலி மிக்க பேரரசும், எழில்மிக்க நகரங்களும், மங்கோலியப் போர் வெறியன் செங்கிசுகானின் படையெடுப்பின்போது மண்மேடாக மாறிவிட்டன. அந்நாட்டுக் கவிஞர்கள் யாத்த அரபுக் கதைகளும், ஆயிரத்தோர் இரவுகளுமே (அல்ப் லைலாவலைலா) இன்று அவைகட்குச் சான்று பகர்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/53&oldid=595605" இலிருந்து மீள்விக்கப்பட்டது