பக்கம்:பாரும் போரும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

உலகில் போரை ஒழித்து, அமைதியை நிலை நாட்டும் பணியில் இந்திய நாடு பெரும் பங்கு எடுத் துக்கொண்டு செயலாற்றுவதை உலகம் அறியும். பெர்னர்டுஷா, இரஸ்ஸல், தால்ஸ்தாய் போன்ற உலகப் பேரறிஞர்களும், ஐன்ஸ்தீன் போன்ற விஞ் ஞானிகளும், காந்தி, நேரு போன்ற அரசியல் வாதி களும் உலக அமைதிக்குப் பாடுபட்டனர் ; பாடுபடு கின்றனர். எதிர்கால உலகை உருவாக்கும் சிற்பி க ள | ன மாணவர்கள், இப்பெரியார்களின் குறிக் கோளைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்டு ஒழுக வேண்டியது, அவர்கள் தலையாய கடமையாகும். அக்கடமையை அவர்கட்கு உணர்த்தவேண்டிப் "பாரும் போரும் என்ற இந்நூலே அவர்கட்கு உரிமை யாக்குகிறேன். இந்நூலே அச்சியற்றும்போது உட னிருந்து உதவிசெய்த ஈரோடு, மாசன உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர், புலவர் கரு. காசி அய்யா அவர்கட்கும், சென்னை, C. A. H. இந்து முஸ்லிம் உயர்நிலைப்பள்ளித் தலைமைத் தமிழாசிரியர், வித்துவான் பு. செல்வராசனர் அவர்கட்கும், வெளி யிட்ட சிவலிங்க நூற்பதிப்புக் கழகத்தார்க்கும் என் உளங்கனிந்த நன்றி.

சேலம். இங்ங்னம், 1 6–10–58. மு. சண்முகசுந்தரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/6&oldid=595511" இலிருந்து மீள்விக்கப்பட்டது