பக்கம்:பாரும் போரும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

குழந்தையையும் கொன்றெழித்தான் ; மிகவும் சினங்கொண்ட சமயங்களில், தன் ஆருயிர் நண்பர் களையும் கொன்று வீழ்த்தினன். சிற்பக்கலைக்கும், கட்டடக் கலைக்கும் நிலைக்களய்ை விளங்கிய எழில் மிக்க நகரங்களை மண்மேடாக்கி, மக்களைப் பலிக் கடாக்களைப் போல் வெட்டி வீழ்த்திக் குருதியாறு பெருக்கெடுத்தோடுமாறு செய்தான் ; பாரசீகப் பேர ரசை அழித்து, அழகும் ஆடம்பரமும் திகழ அணி தேர்ப்புரவியும் ஆட்பெரும் படையும் புடை சூழ, அந்நாட்டு அரியணையில் அமர்ந்திருந்தபோது, தன்னைக் கடவுளுக்கு ஒப்பானவன் என்று எண்ணி இறுமாப்புக் கொண்டான். தன் முன் வருபவர் யாராக இருந்தாலும் தலே குனிந்து, தன் தாளே முத் தமிட வேண்டு மென்று ஆணையிட்டான். பாவம்! இத்தகைய பீடும் பெருமையும் உடன் அழிய மிக வும் இளமையிலேயே செத்தொழிந்தான்.

அவனுடைய இறப்புக்குப் பின் அவன் நிறுவிய பேரரசைத் தாலமி, செலுயூகசு போன்ற அவன் படைத் தலைவர்கள் பங்கு போட்டுக் கொண்டனர். அவனுடைய குடும்பத்தாரும் ஒரு வரையொருவர் வெட்டிக்கொண்டு மாண்டனர். * உலகத்தை வென்றவன் ' என்று அலெக் சாந்தரை இன்று அழைக்கிருர்கள். ஒரு சமயம் தான் வெற்றிகொள்ள உலகில் வேறு நாடுகள் இல்லையே என்று அவன் அழுதானும். ஆனல் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு சிறிய நிலப்பரப்பைத் தவிர அவன் வேறு எதையும் வெற்றிகொள்ளவில்லை ; சிற்றரசனை புருடோத்தம ளிைன் வீரமே அவனை வியப்பிலாழ்த்தியது என்ருல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/61&oldid=595621" இலிருந்து மீள்விக்கப்பட்டது