பக்கம்:பாரும் போரும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 தன் வீரர்களைப் போலவே, அவன் தன் படையி லிருந்த குதிரைகளுக்கும் சிறந்த பயிற்சியளித்திருந் தான். முதன் முதல்ாக, செங்கிசுகான் கிழக்கு நோக் கிச் சென்று, வடசீனுவிலும், மஞ்சூரியாவிலும் பரவி யிருந்த கினிய சாம்ராச்சியத்தை யொழித்து, பீகிங் நகரைக் கைப்பற்றிக்கொண்டான். கொராசம் நாட் டையும் வென்ருன். பிறகு தன் படைவெள்ளத்தை மேற்கு நோக்கித் திருப்பிவிட்டான். ஆசியரும் ஐரோப்பியரும் தங்களை நோக்கி ஒரு பெரும் புயல் கிளம்பிவிட்டதை உணர்ந்தனர். மங்கோலியப் போர் உருளை எதிர்ப்பட்ட எழில் நகரங்களையும் எண்ணற்ற மக்களையும் இரக்கமின்றி நசுக்கிக் கொன்றது. அழகிய அரண்மனைகளும், மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும் நிறைந்த பொகாரா நகரம் பொசுக்கிச் சாம்பலாக்கப்பட்டது. கொராசம் நாட்டுத் தலைநகராகிய சாமர்க்கண்டு மண் மேடாகியது. அதில் வாழ்ந்த பத்து லட்சம் மக்க ளில் 50,000 பேரே உயிர் பிழைத்தனர். ஈரட், பால்க் முதலிய வளநகர்கள் பலவும் பாழ்பட்டன. கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். நடு ஆசியாவில் பல நூ ற் ரு ண் டு க ளா க தழைத் தோங்கிய கலைகளும், கைத்தொழில்களும் பெயர் சொல்வதற்கின்றி மறைந்தொழிந்தன. பாரசீகத் தின் நாகரிக வாழ்க்கை பூண்டற்றுப் போயிற்று. செங்கிசுகான் சென்ற விடமெல்லாம் சுடுகாடாயின. பிறகு அவன் உருசிய நாட்டிற்குள்ளும் புகுந்தான். அங்கு ஆண்ட கீவ் கோமகனை வென்று சிறைப்படுத் தின்ை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/74&oldid=820533" இலிருந்து மீள்விக்கப்பட்டது