பக்கம்:பாரும் போரும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 பெறத் தன் மகனை அவள் நெப்போலியனிடம் அனுப்பினள். "என் தந்தையின் நினைவுச் சின்ன மாக அவ்வாள் ஒன்றே இருக்கிறது; அன்பு கூர்ந்து அதைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று கண் னில் நீர் ததும்ப அச்சிறுவன் நெப்போலியனிடம் கேட்டான். நெப்போலியன் உள்ள மிரங்கி, அச்சிறு வனிடம் வாளைத் திருப்பிக் கொடுத்துவிட்டான். மறு நாள் அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, ஜோசபைன் நெப்போலியனிடம் வந்தாள். அவளுடைய அமைதி யான அழகும், பணிவோடு கூடிய இனிய பண்பும் நெப்போலியனைப் பெரிதும் கவர்ந்தன. தன்னைவிட ஈராண்டு வயதில் முதிர்ந்தவளான ஜோசபைனை நெப்போலியன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டான். சின்னுட்களில் நெப்போலியன் இத்தாலியில் இருந்த பிரெஞ்சு சேனைக்குத் தலைவனுக அமர்த்தப் பட்டான். போ நதிக்கரைப் போரும் மாண்டுவாக் கோட்டை முற்றுகையும், வியன்ன நகரில் நடந்த போரும் நெப்போலியன் ஆஸ்திரியரின் மேல் அடைந்த மாபெரும் வெற்றிகளாகும். பிறகு நெப் போலியன் நாற்பதாயிரம் வீரர்களும், முப்பது போர்க் கப்பல்களு மடங்கிய பெரும் படையோடு எகிப்தின் மேற் படையெடுத்துச் சென்று வெற்றி மாலே சூடினன்; இந்தியாவின்மேல் படையெடுக்க வும் திட்டமிட்டான். ஆனல் கடற்போரில் வல்ல வனும் அஞ்சா நெஞ்சனுமான நெல்சனின் தலைமை யில் வந்த ஆங்கிலக் கடற்படை, நெப்போலியனின் கடற்படையை டிரபால்கர் எ ன் னு மி ட த் தி ல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/80&oldid=820539" இலிருந்து மீள்விக்கப்பட்டது