பக்கம்:பாரும் போரும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 கப்பலால் மூழ்கடிக்கப் பட்டது. அதில் பயணம் செய்தவர்களில் நிறைய அமெரிக்கரும் இருந்தார்கள். இதனுற் பெருஞ்சினங் கொண்ட அமெரிக்காவும் போரில் இறங்கியது. இதற்குள்ளாக, ஜெர்மனிக்குச் சாதகமாக ஒரு நிகழ்ச்சி நடந்தது. 1917-இல் உருசிய நாட்டில் புரட்சி ஏற்பட்டு, ஆட்சி போல்ஷ்விக்குகளின் கைக்கு மாறியதால், அவர்கள் போரை நிறுத்திவிட் டார்கள். அதல்ை ஜெர்மனி தன் முழு வலியையும் மேற்குப் போர்முனைக்குத் திருப்பிவிட்டது. உருசியா வில் புரட்சி நடக்குமென்று ஒரு திங்களுக்கு முன் தெரிந்திருந்தால், ஜெர்மனியை வெல்ல யாராலும் முடியாது. உலக வரலாறே மாறியிருக்கும். ஆல்ை, இதற்குள் பிரிட்டிசாரின் கடல் வலிமை ஓங்கியது. மேலும் அமெரிக்கா புது வலிமையோடு போரில் இறங்கியது. ஆங்கிலக் கப்பற்படை, உணவு ஏற்றிச் செல்லும் ஜெர்மானியக் கப்பல்களைத் தாக்கி, அந் நாட்டைப் பட்டினி போட்டது. ஜெர்மானிய மக்கள் பசிக்கொடுமையால் வாடினர். அதற்குள் ஜெர்மனி யில் முடியாட்சி வீழ்ந்தது. கெய்சர் ஜெர்மனியை விட்டு ஆலந்து நாட்டிற்கு ஓடிவிட்டார். எனவே ஜெர்மனி சமாதானத்தை நாடுவதைவிட வேறு வழி யில்லாமல் போய்விட்டது. 1918-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் பதினெட்டாம் நாள், இரு சாராரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அமெரிக்க மக்கட் தலைவரான உட்ரோ வில்சன் வகுத்த பதினன்கு கொள்கைகளைக் கொண்ட ஒப்பந் தத்தோடு முதல் உலகப்போர் முடிவடைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/96&oldid=820555" இலிருந்து மீள்விக்கப்பட்டது