பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் பற்றி தெளி வாகப் பேச வேண்டுமானல் பகுத்தறிவுக் கூட்டத்தில்தான் பேச முடியும். அப்படிக்கில்லாது கடவுள், மதம், மூடநம்பிக் கைக்கு ஆட்பட்ட இடங்களில் பேசுவது என்ருல் வழ வழா கொழ கொழா அன்றுதான் பேச வேண்டி வரும். பாரதிதாசன் அவர்கள் புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்திய முதல் கவிஞரும் கடைசிக் கவிஞரும் ஆவார். அவருக்கு ஈடாக வேறு எந்தக் கவிஞரும் தோன்றவே இல்லை. தோன்றியவர்களும், தோன்றுகிறவர் களும் பழமைக் கருத்துக்களைக் கொண்டவர்கள் தான் ஆகும். இன்றைக்கு நம் நாட்டில் இவரோடு குறிப்பிடத்தக்க வேறு புலவர்கள் இருந்தார்கள் என்றே, இருக்கிருர்களோ என்ருே சொல்லுவதற்கு இல்லை. நமது தமிழ்ப் புலவர்கள் வள்ளுவரைக் கூறுவார்கள்; அடுத்து சாதிச் செல்வாக்கும் அரசியல் செல்வாக்கும் கொண்ட பாரதியாரைக் கூறுவார்கள். இவர்கள் எல்லாம் பழமைக் கருத்துக்களைக் கொண்டவர்கள், பெரிதும் மக்கள் இன்று ஒத்துக் கொள்ளத்தக்கவோ, பின்பற்றத் தக்கவோ கூடிய கருத்துக்களைக் கூறவில்லை. பாரதிதாசன் அப்படி அல்லவே, அவர் புதுமைக் கருத்துக்களையும் புரட்சிக் கருத்துக்களையும் மக்கள் சமுதாயத்திற்குத் தேவையான சமதர்மக் கருத்துக்களையும் துணிந்து வெளியிட்டுள்ளார். அவருக்கு அனுசரணையாக சுயமரியாதை இயக்கமும் திராவிடர் இயக்கமும் இருந்தன. சுருங்கச் சொன்னல், அவர்போல் தீவிரமான கருத்துக்களே அவருக்கு முன்பும் பின்பும் எடுத்துச் சொன்னவர்கள் இன்னர் என்று எடுத்துக் காட்ட ஆளே இல்லையே! அவர் கடவுள், மதம், சாஸ்திரம், பெண்ணடிமை, மூடநம்பிக்கைகள் இவைகளைக் கண்டித்து நன்ருகப் பாடியுள்ளார்.