பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அதைப் போலவே நாமக்கல் செல்லப்பனர் அவர்கள் நான் சேலத்தில் ஒரு திரைப்பட நிறுவனத்திலே பணியாற்றியபோது, சேலத்திற்கு அருகாமையிலே ஒரு சிற்றுாரிலே நடை பெற்ற திருமண விழாவிற்கு இலக்கு வருைம் நானும் சென்று இருந்தோம். அப்பொழுது இலக்கு வளுர் அவர்கள் நாமக்கல் செல்லப்பஞர் அவர்களிடத்திலே என்ன அறிமுகப்படுத்தி இவர் என்னுடைய மாணவர் என்று குறிப்பிட்டார். அதற்குப் பிறகு நாமக்கல் செல்லப்பனர் அவர்களை இங்கே சந்திக்கின்ற வாய்ப்பு நம்மு டைய திராவிடர் கழகத்தினுடைய நண்பர்களால்-குறிப் பாக வீரமணி அவர்களால் எனக்குக் கிடைத்திருக்கின்றது. பேராசிரியர் இராமனுதன் அவர்களை நான் அடிக்கடி சந்திக்கின்ற வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றேன். புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் அவர்களுடைய கவிதைகளைத் திறய்ைவு செய்தும், அவருடைய கருத்துக்களைப் பரப்பு கின்ற பணியிலே ஈடுபட்டும், தந்தை பெரியார் அவர் களுடைய லட்சியங்களை, பேரறிஞர் அண்ணு அவர் களுடைய கொள்கை-கோட்பாடுகளை நாட்டிற்கு எடுத்துச் சொல்லுகின்ற நற்தொண்டினை ஆற்றியும் வருகின்ற பேராசிரியர் இராமனுதன் அவர்களும் இந்தப் பாராட். டினைப் பெற்று இருக்கின்றர்கள். அவர்களுக்கு எல்லாம் சிறப்பும் பாராட்டும் இங்கே வழங்கப்படுகின்றது என்று எண்ணிய போது வெள்ளி யாலோ அல்லது தங்கத்தாலோ பரிசுகள் வழங்கப்படுமோ என்கின்ற எண்ணத்தோடுகூட நான் இங்கு வந்தேன். பிறகுதான் இது பெரியார் திடல் என்பதையும், அப்படிப் பட்ட ஆடம்பரமான பரிசுகளோ வெகும்திகளோ இவர் களுக்கு வழங்கப்பட்டால் பெரியார் அவர்களுடைய சிக்கனக் கொள்கைக்கு-ஆடம்பரமற்ற கொள்கைக்கு மாறுபாடானது என்பதை, அந்த விஷயத்திலும் கடைப் பிடித்துக் கொண்டிருக்கின்ற என்னுடைய நண்பர் வீரம்ணி அவர்கள் மிகச் சிறப்பாகக் கடைப்பிடித்து அவர்களுக்குச் சில சால்வைகளை போர்த்தச் சொன்னர்.