பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சவில்லை எனக்கு இன்று அளித்த கெளரவத்திற்கு என் நன்றி யைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இது எனக்கு அளித்த கெளரவமல்ல; தமிழுக்கு அளித்த கெளரவம். செய்யத் துணிபவனுக்கு, எண்ணத் துணிபவனுக்குத் தான் வெற்றி கிட்டுகிறது. தன்னுடைய செயல் முறையும் கொள்கையும் சரியானதென்று நம்புபவன், எந்த எதிர்ப் புக்கும் அஞ்சி கொள்கையினின்றும் பிறழக் கூடாது. இவனுக்கு என்ருவது ஒருநாள் வெற்றி வந்தே தீரும். என் வாழ்நாள் முழுவதும் இதுவே என் கொள்கையாக இருந்து வந்திருக்கிறது. சுயேச்சையான மனேயாவத்திடம் எனக் கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் பலன்தான் நான் இன்று பெற்றிருக்கும் இந்தப் பணமுடிப்பு இன்று, தமிழகத்தில் பழமையின் சிற்ப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் போதும் என்னும் மனேபர்வம் பொதுவாகப் பரவியிருக்கிறது. இது முன்னேற்றத்திற்கு வழி காட்டாது. பழமையை உதறித் தள்ளி புது வழியை மேற்கொள்பவன்தான் உண்மையான சேவை செய்தவன். தமிழுக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. மக்களின் தமிழ்க் காதல் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. கரை யான் அரித்த பழைய துறையிலிருந்து மெல்ல மெல்ல விலகிப் புரட்சிக்கரமான புதுத் துறையில் செல்ல ஆரம் பித்திருக்கிரு.ர்கள். இன்றைய நவயுக எழுத்தாளர்களும் கவிகளும், தமிழ் நாட்டில் எதிர்காலம் சிறப்படைய வேண்டுமானல், அதற்கு உண்மையாகவே புத்துயிர் பிறக்க வேண்டுமாளுல், இத்தனை எழுத்தாளர்களும், கவி களும் குறுகிய சாதி வேறுபாடுகளைத் தகர்த்து எறியக் கங்கணம் கட்டிக் கொண்டு புறப்பட வேண்டும். அடிமை மனப்பான்மையை ஒழித்து சுயேச்சையான எண்ணத்தை யும், பரந்த நோக்கங்களையும் வளர்க்க முற்பட வேண்டும்.