பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 ா 1944ல் கவிஞரின் நூல்களை வெளியிடுவதற் காகவே முல்லைப் பதிப்பகத்தை அ. திருநாவுக்கரசு செட்டியார் ஒத்துழைப்போடு முத்தையா தொடங்கினர். - ரு அழகின் சிரிப்பு அழகான பதிப்பாக, முல்லை பதிப்பகத்தின் முதல் வெளிடாக வந்தது. முல்லைப் பதிப்பகம் பிராட்வே 59-ம் எண்கட்டிடத் தில் இயங்கி வந்தது. 0 கவிஞரின், அழகின் சிரிப்பைத் தொடர்ந்து நல்ல தீர்ப்பு", பாண்டியன் பரிசு காதல் நினைவுகள்: எதிர்ப்ாராத முத்தம் குடும்ப விளக்கு இரண் டாம் பகுதி, பாரதிதாசன் கவிதைகள்', :தமிழியக்கம், இருண்டவீடு ஆகியநூல்களை கவர்ச்சியாக-அழகாக ஆர்வத்தோடு வெளி யிட்டார் முத்தையா. - ா அப்பொழுது அரசு நூலகங்களோ, இப்போது ஆங்காங்கே காணப்படுவதைப் போல புத்தக விற்பன்ை யாளர்களோ கிடையாது. வாசகர்களையே நம்பி இருந்த காலம். ஆனாலும், தமிழ் ஆர்வம் காரணமாக நூல்கள் நல்ல விற்பனை ஆயின. கவிஞர் சென்னைக்கு வரும்போது முல்லை பதிப் பகத்தில் தங்குவார். கவிஞரைக் காண திரு வாளர்கள் புதுமைப்பித்தன், அப்பாத் துரையார், நடிகமணி நாராயணசாமி, கொத்தமங்கலம் சுப்பு, தி. ஜ. ர, கவிஞர் கம்பதாசன், நாரண துரைக்கண்ணனர், சக்கரவர்த்தி நயிஞர், எஸ் வி. லிங்கம், அவ்வை டி. கே. சண்முகம், காஞ்சி மணிமொழியார், பேராசிரியர் அன்பழகன், கவிஞர் கண்ணதாசன் முதலானேர் முல்லைப் பதிப்பகத்துக்கு வந்து கவிஞரைக் கண்டு மகிழ்ந்து. 27 13–3