பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக்கவிஞர் சுரதா அவர்களின் - . அணிந்துரை முல்லை முத்தையா - . இந்தப் பெயரை நினைக்கும் பொழுது பழைய நினைவுகள் என் பக்கத்தில் வருகின்றன. அலைகள் சந்திக்கும் சென்னை பட்டினப்பாக்கத்தில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்கள் இல்லத்தில் 1943இல் நான் அவரைச் சந்தித்தேன். பாவேந்தர் அவர்கள்தான் என க் கு அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பிறகு 41 ஆ ண் டு கள் நகர்ந்து விட்டன. அன்று, பாவேந்தரின் பாடல்களைத் தமிழ் கர்டெங்கும் பரப்புவதற்குத் தந்தை பெரியாரும், குத்துாசி குருசாமியும், மணவை திருமலைசாமியும் பெரு முயற்சி எடுத்துக் கொண்டனர். . அப்போது. பாவேந்தரின் கவிதைகளை நூல் வடிவில் வெளியிடுவதற்காக முல்லைப் பதிப்பகத்தினைத் தொடங்கியவர்தான் என் இனிய ண் பர் முல்லை முத்தையா. முல்லை பதிப்பகத்தின் முதல் வெளியீடாக அழகின் சிரிப்பு வெளி வந்தது. z . வடலூர் வள்ளலாருக்கு ஒரு தொழுவூர் வேலாயுத முதலியார் கிடைத்ததைப் போன்று பாவேந்தருக்கு ஒரு முல்லை முத்தையா கிடைத்தார்.