பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாட்டின் பாரதீய பரம்பரை அதன் ஏகப்பிரதிநிதி பாரதிதாசனே ! ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி’ என்று அதட்டிக் கேட்ட குரல் ஒடுங்கி சுமார் இருபது வருடங்கள் கழித்த பிறகு, பாரதீய பரம்பரை ஒன்று இருப்பதாகத் தெரிவித்துக் கொள்ளப்பட்டது. பாரதீய பரம்பரை என்று காவியத்துறையில் இருப்பதை ஒப்புக் கொள்வது. அவசியமாயின், அதன் ஏகப்பிரதிநிதி பாரதிதாசனே என்பதற்கு முல்லைப் பதிப்பக வெளியீடான ‘அழகின் சிரிப்பு ஒர் அத்தாட்சி. ஆற்ருெழுக்குப் போன்ற நடை, சிற்ருேடையின் ஆழமும், வேகமும், தெளிவும் பெற்ற கற்பனை. யாரையும் சட்டை செய்யா, எவருக்கும் பணியாத கருத்தமைதிஇவைதான் பாரதிதாசன். - - திருவிளக்கிற் சிரிக்கின்ருள் நா ரெடுத்து நறுமலரைத் தொடுப்பவளின் விரல் வளைவில் நாடகத்தைச் செய்கின்ருள்; அடடே, செங்தோள்' புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புது நடையில் பூரிக்கின்ருள்.