பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 யாவரும் கேளிர்: பாவேந்தர் தமிழகக் கவிஞர்; ஆயினும் உலக நோக்குக் கொண்டவர். தமிழ்த் தேசியம் பாடியவர்; ஆயினும் பல தேசியங்கள் பகையின்றி இணைந்த உலக தேசியத்தை விரும்பியவர்; தம் மொழி, தம் நாடு, தம் நாட்டு மக்கள், அவர்கள் வாழ்வு, வளம் பற்றியே பாடிய ஒருவர் உலகச் சிந்தனையாளராக உயர முடியுமா என்னும் வின எழலாம். உயர முடியும். அதுவும் அவரால்தான் முடியும் என்பதே. அவ்வினவிற்கான விடையாம். தன் குழந்தையிடம் பற்று வைத்திருப்பவனல் தான் பிற குழந்தைகளிடம் பற்றுக் காட்ட முடியும். தன் குழந்தையிடமே பற்றில்லாதவன் பிற குழந்தைகளிடம் பற்றுக் கொள்வது எங்ங்னம்? தன் குழந்தையிடம் பற்று வேண்டும்; ஆனல் அது மட்டுமேயாக இருந்து விடக் கூடாது. தன்னுரிமைப் பற்று பொது உரிமைப் பற்றுக்கு அடித்தளமாக, படிக்கட்டாக அமைய, வேண்டும். உலகப் பார்வை: கவிஞன் தன்னை ஒரு குறுகிய எல்லைக்குள் கட்டுப் படுத்திக் கொள்ளக் கூடாது. அதன் சிந்தனை உலகளா வியதாய் இருக்கவேண்டும், எனும் கொள்கையுடையவர் பாவேந்தர். அவர் பாரதியாரைப் பற்றி 'பாரதியார் உலக கவி - அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் (வாய்ந்தோர்; ஒருருக் கொரு நாட்டுக் குரிய தான - ஒட்டைச்சாண் கினைப்புடையவர் (அல்லர்' எனச் சொல்வதிலிருந்து இதை நாம் அறியலாம். கவிஞர் பாரதிதாசன் வானவில்லை காண்கிறார். அதன் வண்ணங் களிலே எண்ணத்தைப் பறி கொடுக்கிருர் நொடி தோறும் கரைந்து சிறிது நேரத்தில் வானவில் மறைகிறது இன்பமும், துன்பமும் தோன்றுவதும், மறைவதும் தெரியாது என்