பக்கம்:பாற்கடல்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

125


யாகக் குலுங்கும். அது பாட்டுக்கு, தாயுமானவர் பாடல், அறப்பளிசுவர சதகம், குமரேச சதகம், பட்டினத்தார் பாடல், குறள், ‘கச்சி யேகம்பனே', அருட்பா, திருப்புகழ், எப்படித்தான் தங்கு தடையின்றி வருமோ, வந்து கொண்டேயிருக்குமோ, அத்தனையும் நுண்ணிய அர்த்தச் சுவைகளுடன். என் எழுத்தை பாதித்த முக்கியப் பாத்திரங்களில் முதலியாரும் ஒருவர்.

ஆனால் என்னுடைய வியப்பு யாதெனில், இந்த ஒரேவிதமான உறுமலில் இத்தனை அர்த்தங்கள் விசிறுகின்றன?

“சிவபாக்கியம், நீ எப்படிப் புரிஞ்சுக்கறே?” என்று கேட்டால், அவள் சிரிப்பாள். "என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்? நீதான் இங்கிலீஸ் படிச்சவன். நீதான் சொல்லணும். எனக்குத் தமிழ் எளுத்துக்கூடத் தெரியாது.”

மௌனம் என்பது வெறுமனே பேசாமல் இருத்தல் அல்ல. மௌனம் பேச்சின் ஒரு ஸ்தாயி. அதில் ஏதோ யோகம், தாந்த்ரீகம் கலக்கிறது. அல்லது ஆரம்பிக்கிறது என்று நினைக்கவே கவர்ச்சியாக இருக்கிறது. அங்கு இன்னொரு தடத்தின் கதவு திறக்கிறது. அல்ல, திறக்கக் காத்திருக்கிறது. இதைவிட உன்னத இலக்கு, இலக்கியத்தில் உண்டா?

தட்டுங்கள் திறக்கப்படும்.

சொல்லிவிடலாம், சுலபமாக,

குறிப்பாக உணர்தல்கூடப் பெரிதல்ல, உணர்வது அதைவிடப் பெரிதல்லவா? புத்திசாலித்தனத்துக்கும் முன்னால் புரிந்துகொள்ள இஷ்டம், ஓரளவு பயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/131&oldid=1533983" இலிருந்து மீள்விக்கப்பட்டது