பக்கம்:பாற்கடல்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

233


அத்தனை யந்திரங்கள், தந்திரங்கள், டெக்னிக்குகள், ராக்ஷஸ் ஸ்டுடியோக்கள் பரம்பரையுடன், அந்த வெள்ளைத் திரையை நம்பித்தான் இயங்குகிறது. அதனின்றுதான் பிதுங்கி வருகிறது.

தெலுங்கு, மாத்வ, மராத்தித் திருமணங்களில் திரையின் பங்கு இன்றியமையாதது. மகத்தானது. மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையே திரையை இருவர் பிடித்துக்கொண்டு நிற்க, இரு தரப்பு புரோகிதர்களும் பாடுகிறார்கள்- பெண்டிருக்குப் பாடத் தெரியாததால் என்று நினைக்கிறேன். சட்டென்று திரை விலகுகிறது. வதுக்கள் ஒருவரையொருவர் முதல் முழி எனும் ஐதீகம்; அந்த 'த்ரில் தனிதான். நான் - நீ உனக்கு நான், எனக்கு நீ உன்னைப் பார்க்கிறேனா? உன்னில் என்னைப் பார்க்கிறேனா? உனக்கும் அப்படித்தானே? எங்கிருந்தோ வந்தோம். சந்திக்கவே திரைக்கு வந்து சேர்ந்தோம். திரை விழுந்தது, நமக்கு உலகம் பிறந்தது. நீயும் நானும்தான் இவ்வுலகம். இதில் நம் பிம்பம் கண்டு மகிழ்வோம். புகழ்வோம், மறைவோம், மறப்போம். மறுபடியும் தோன்றி அடையாளம் கண்டுகொள்வோம்.

த்ரில், த்ரில், த்ரில்! வெறும் திரையைப் பார்ப் பவரைப் பற்றிக் கேள்வி இல்லை.

இப்படியெல்லாம் நான் ஸ்தாபிக்க வருவது யாவதுக்கும் பூமி, திரைச்சீலை, Backdrop, Background, Canvas. The world is a stage என்றான் Shakespeare. The world is my canvas என்பேன் நான். நான் எனும் என் ஸ்வயாகாரப் பெருமிதத்தில் உலகமே என் ஓவியச்சீலை, பூமி, சூரியனைச் சுற்றி வருகையில் ஏற்படும் ஒளியின் நிழலில், வேளைக்கு வேளை மாறும் ஒளியின் நிழலில் என்னைப் பல கோணங்களில் கண்டு தீட்டிக்கொண்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/239&oldid=1533320" இலிருந்து மீள்விக்கப்பட்டது