பக்கம்:பாற்கடல்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

லா. ச. ராமாமிருதம்


Perpetuation by Continuity and Quality of the race.

(வர்க்கத்தின் தொடர்ச்சி மூலம், தரத்தின் மூலம் அதன் சாசுவதம்)

அர்த்தமுள்ளவையெல்லாம் பயனுள்ளவை அல்ல. பயனுள்ளவை எல்லாம் அர்த்தமுள்ளவையுமல்ல.

அர்த்தமுள்ளவையும் கடைசியில் அர்த்தமற்றுப் போகின்றன. (காரணம்: எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டுத்தானே போக வேண்டியிருக்கிறது).

நம்ப வேண்டியவை வேர்கள்; விழுதுகள் அல்ல.

வேர்கள் உன்னைக் கைவிடா. அவற்றில் பரம்பரையின் தவபலம் அடங்கியிருக்கிறது. விழுதுகளைப் பிடித்துக்கொண்டு தொங்கினால் அவை அறுந்து நாம் வீழ்வோம். அல்லது விழுதுகளுடன் பாம்புகளும் தொங்குகின்றன.

ஆகவே, வேர்களின் வேரோடலுக்குப் பாடுவோம்; வேர்களைப் புகழ்வோம். வேர்களின் பலத்தில்தான் விழுதுகளுக்கு பலம், வேர்கள் லக்ஷியங்கள்; நம்பிக்கைகள், புதுப்பிக்கும் சக்திகள். இன்று, நேற்று, நாளை இவை வேரின் விளைவில் எழும் டங்காரத்வனி இன்றின் பின்னோக்கில் பிறந்த நேற்றுக்கு நினைவு மீட்டும் யாழிசை முன்னோக்கில் சிரிப்பது நாளையின் வானவில்,

சாரங்களைத் தட்டி விட்ட முற்றும் துறந்த ஞானியர்தாம் அறிவர், இந்த இன்று, நேற்று, நாளையின் முழு சூட்சமத்தையும். நாம், எப்படியும் நான் அவர்களின் நிலையை அடையாதவரை, எழுத்து, இசை, கலை எனும் வெள்ளைப் பொய்களோ, அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/250&oldid=1533340" இலிருந்து மீள்விக்கப்பட்டது