பக்கம்:பாற்கடல்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

245


நிஜங்களோ இவைதாம் நம் தஞ்சம். பரவாயில்லை; வைமூலம் நமக்குக் காணக் கிடைத்ததை, கண்டவரை விண்டிடுவோம்.

அப்படியும் காணக் கிடைக்காமல் இல்லை. இருளில் செதில்கள் வெள்ளியும் தங்கமுமாகச் சுடர் விடுகின்றன. 'ட்ச்சிக் ட்ச்சிக்' விட்டத்தில் பல்லி எச்சரிக்கிறது.

நடுக்கடலில் யக்ஷிணியின் கானம் கேட்கிறது. எனக்குப் பித்துப் பிடித்துவிட்டது. பாய்மரத்தோடு என்னைப் பிணைத்திருக்கும் தளைகளை அறுக்க, அவிழ்க்க முயல்கிறேன். Song of the Sirens Ulysses பாவனை நண்பர்களின் முன்யோசனையால் பத்திரமாக கானம் கடந்து செல்கிறேன்.

இந்தப் பக்கங்கள் சற்று அத்துமீறிவிட்டன. எனக்கே தெரிகிறது. என் சொந்தப் பக்கங்களாகத் தற்சமயத்துக்கு இருந்துவிட்டுப் போகட்டும். இன்று எனக்குச் சொந்தம். நாளைக்கு உங்களுக்குச் சொந்தம்.

இப்போதைக்கு இவை, கிழவன் காற்றாடி விடுகிற மாதிரி.

(உவமை சரியல்ல; ஜப்பானில் முதியோர் காற்றாடி விடுவது முறையே)

கிழவன் பம்பரம் விடுகிற மாதிரி (ஊ - ஹும் - இதுவும் போதாது)

கிழவன் பாண்டி விளையாடுகிற மாதிரி (ஆ! பரவாயில்லை)

ஒவ்வொருவர் உள்ளேயும் ஒரு துஷ்டப் பையன் இருக்கிறான். அவனை ஓரளவு அடக்கி வைக்கலாமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/251&oldid=1533341" இலிருந்து மீள்விக்கப்பட்டது