பக்கம்:பாற்கடல்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



19

Magic lantern Slide இப்போது மாறுகிறது. சற்று வெடுக்கெனத்தான். ஆனால் சம்பந்தத்துடன்தான்.

Reserve Bank அண்ணாவைப் பற்றிச் சொல்லப் போகிறேன்; சொல்லியே ஆகணும்.

அண்ணா பெயர் வெங்கட்ராம ஐயர். ஆனால் அவர் எல்லோருக்கும் அணணா. Reserve Bank-இல் வேலையாயிருந்தார். பரோபகாரம் செய்வதில், அதாவது சரீர உபகாரத்துக்கு - அவரை மிஞ்சி எனக்கு யாரும் இதுவரை நினைவுக்கு வரவில்லை.

கலியாணத்தில் சந்தனப்பேலா, சர்க்கரைத்தட்டு தூக்கணுமா? கூறைப்புடவை, தாலித்தட்டை எல்லோருக்கும் காண்பிக்கணுமா?

பந்தியில் கோகர்ணம் தூக்கணுமா?

சமையல்காரன் சமையலுக்குத் துண்டு விழறதென்றால் மார்க்கெட்டுக்குப் போய் வரணுமா?

இதைவிட மேல்.

பிணம் தூக்கக் கால்மாடு ஒரு கை குறைகிறதா? அண்ணாவை –

கூப்பிடவே வேண்டாம். இதோ. “ஏம்பா அனாவசியக் கவலைப்படறே? இதுக்கெல்லாம் புண்ணியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/332&oldid=1534460" இலிருந்து மீள்விக்கப்பட்டது