பக்கம்:பாற்கடல்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

337


அடுத்த batch –

கரங்கள் ஆகாயம் நோக்கித் தூக்கிச் சூரியனை அஞ்சலிக்கும் பூ மலர்ச்சிகள். விரல்கள் தனித்தனியாக இதழ் விரியலில் தவிக்கின்றன; துடிக்கின்றன. அடுத்து, விரைந்து, மார்கள் மேல் இறங்குகின்றன. மார்புகள் குருதித் தடாகங்கள்.

”ஹஸ் - ஸேன்! ஹுஸ் - ஸேன்” இரண்டு நிமிடங்களில் அடிகள் உச்ச சுருதியை அடைந்து, தங்கிப் படிப்படியாகத் தணிகின்றன. கரங்கள் மார்புகளைத் தடவிக் கொள்கையில், தடாகத்தில் மிதக்கும், கசங்கிய இதழ்கள்.

குருக்கள் அடுத்த சுலோகத்தைத் தொடங்குகிறார். இந்த batch நகர்கிறது. அடுத்த batch நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த அடி தாங்காமல் களைத்து விழுந்தவர்களை, இதைப் பார்க்கச் சகிக்காமல் கூட்டத்தில் மூர்ச்சையானவர்களைத் துக்கிக்கொண்டு ஆம்புலன்ஸ்கள் அவசரச் சிகிச்சைக்கூடங்களுக்குப் பறக்கின்றன. இரட்டை மாட்டுக் கட்டை வண்டியிலுள்ள, பெரிய தவலைகளிலிருந்து, மாரடித்துக் கொள்ளுபவர்களுக்குச் சிரமபாணம் ஏதோ வழங்கப்படுகிறது.

கடைசியாக முன் சென்றவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு கோஷ்டி தோன்றுகிறது. இந்தக் கோஷ்டியினர் இந்தத்துக்கக் கடலினின்று எடுத்த ஏடு போலும். அவர்களுடைய அழகில், திவ்யமான நிறச் செழிப்பில், உடல் கட்டுமஸ்தானத்தில் அவர்களைச் சுற்றித் திகழும் ஏதோ ஒரு தேஜஸ்ஸின் தூய்மையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/343&oldid=1534600" இலிருந்து மீள்விக்கப்பட்டது